Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி

சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி

 

3.30 மணி நிலவரம்
 
இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 322.39 புள்ளிகள் குறைந்து 27797.01 புள்ளிகள் என்ற அளவில் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 97.55 புள்ளிகள் குறைந்து 8340.70 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது.
 
தங்கம் 10 கிராமிற்க்கு 244 ரூபாய் அதிகரித்து 26,605 ரூபாயாக உள்ளது. கச்சா என்ணெயின் விலை ஏழு ரூபாய் குறைந்து 3,926 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபயின் மதிப்பு 61.88 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
 
இன்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆசியாவில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பங்கு சந்தை மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமானது. மூலதன பொருட்கள், சி என் எக்ஸ் மிட்கேப், மெட்டல்ஸ் ஆகிய துறைகளின் பங்குகள் சற்று அதிகமாக சரிந்து வர்த்தகமாயின. 
.
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
சன் பார்மா 1.41%
எம் அன்ட் எம் 1.35%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்1.19%
ஹெச் சி எல் 0.08%
டி சி எஸ் 0.08%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
 
செசா ஸ்டெர்லைட் 5.16%
ஓ என் ஜி சி 4.40%
பார்தி ஏர்டெல் 4.22%
டாடா பவர் 4.15%

 

என் டி பி சி 3.54%
 11.00 மணி நிலவரம்
 
இந்திய பங்கு சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 64.35 புள்ளிகள் குறைந்து 28055.05 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 24.00 புள்ளிகள் சரிந்து 8414.25 புள்ளிகளுக்கு வர்த்தகமாகின்றன.
 
10 கிராம் தங்கத்தின் விலை 161 ரூபாய் ஏற்றம் கண்டு 26,522 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 51 ரூபாய் குறைந்து 3882 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து 61.87 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது..
 
உலக அளவில் சந்தைகள் மந்த நிலையில் வர்த்தகமாகின்றன. இன்று இந்திய பங்கு சந்தையில் ஹெல்த்கேர், ஐடி, ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், கன்ஸ்யூமர் டியூரபுள்ஸ், மெட்டல்ஸ், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. மொத்தத்தில் 1,245 பங்குகள் ஏற்றத்திலும், 909 பங்குகள் இறக்கத்திலும், 94 பங்குகள் நிலையானதாகவும் வர்த்தகமாகின்றன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
டிசிஎஸ் 1.69%
சன் பார்மா 1.31%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 1.13%
விப்ரோ 0.96%
கெயில் 0.56%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 2.89%
கெயின் இந்தியா 1.88%
செசா ஸ்டெர்லைட் 1.76%
ஏசிசி 1.67%
ஹிண்டால்கோ 1.38%
 
 
காலை 9:30 நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்தில் காலை 9:30 மணி நிலவரப்படி இந்திய சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் நிலையான வர்த்தகத்தில் துவங்கியுள்ளன. சென்செக்ஸ் 3 புள்ளிகள் அதிகரித்து 28122 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்து 8435 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்த்கமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை  28361 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 187 ரூபாய் குறைந்து 3933 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.91 ரூபாயாக உள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் 313 பங்குகள் விலை அதிகரித்தும், 264 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன. கச்சா எண்னெயின் விலை பேரல் 4000 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது ஆசிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
எம்&எம் 1.30%
சன் பார்மா 1.30%
டிசிஎஸ் 0.98%
டாக்டர் ரெட்டிஸ் லேப் 0.83%
டாடா மோட்டார்ஸ் 0.60%
 
விலை குறைந்த பங்குகள்:
 
டிஎல்எஃப் -1.74%
கோட்டக் மஹிந்த்ரா -1.37%
ஓஎன்ஜிசி -1.30%
அல்ட்ராடெக் சிமெண்ட் -1.13%
இண்டஸ்இண்ட் -1.02%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close