Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம்:
 
இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 34.09 புள்ளிகள் அதிகரித்து 27831.10 புள்ளிகள் என்ற அளவிலும். தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 14.95 புள்ளிகள் அதிகரித்து 8355.65 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்தது.
 
10 கிராம் தங்கத்தின் விலை16 ரூபாய் அதிகரித்து 27,175 ருபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 49 ரூபாய் குறைந்து 3,894 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபயின் மதிப்பு 62.02 வர்த்தகமாகின்றது.
 
இன்று 1667 பங்குகள் அதிகரித்தும், 1261 பங்குகள் குறந்தும், 111 பங்குகள் சீராகம் வர்த்தகமாயின. வங்கி, கன்ஸ்யூமர் பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகல் ஏற்றத்ட்த்இல் வர்த்தகமாயினமூலதன பொருட்கள், எஃபெம்சிஜி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
 
ஏற்றத்தில் வர்த்தகமான பங்குகள்
எஸ் பி ஐ 3.34%
ஜிண்டால் ஸ்டீல் 2.76%
ஓ என் ஜி சி 2.58%
பி என் பி 2.45%
பேங்க் ஆஃப் பரோடா 2.38%
 
இறக்கத்தில் வர்த்தகமான பங்குகள்
என் எம் டி சி 2.46%
பி ஹெச் இ எல் 2.45%
ஹெச் யூ எல் 2.05%
கெயில் 1.82%
டெக் மஹிந்திரா 1.69%
 
 
இந்திய பங்கு சந்தைகள் தற்போது சீராக வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 62.68 புள்ளிகள் அதிகரித்து 27859.69 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 21.75 புள்ளிகள் அதிகரித்து 8362.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இது இரண்டு மணி நிலவரம்.
10 கிராம் தங்கத்தின் விலை 43 ரூபாய் அதிகரித்து 27202 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா என்ணெயின் விலை 33 ரூபாய் குறைந்து 3,914 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.00 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது..
 
ஐரோப்பிய பங்கு சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலும், அமெரிக்க பங்கு சந்தைகள் சீராகவும் வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்கு சந்தையில் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளின் பங்கு சந்தைகள் மந்த நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மூலதன பொருட்கள், எஃப்எம்சிஜி, ஐடி ஆகிய துறை சார்ந்த பங்குகள் மந்த நிலையில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஜிண்டால் ஸ்டீல் 3.38%
எஸ்பிஐ 2.43%
ஓஎன்ஜிசி 2.27%
பிஎன்பி 2.13%
டாடா பவர் 2.09%

இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
என்எம்டிசி 2.64%%
பிஹெச்இஎல் 2.08%
கெயில் 1.74%
டெக் மஹிந்திரா 1.65%
சன் பார்மா 1.48%
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ