Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம்

இந்திய பங்கு சந்தைகளின் வர்த்தகம் இறக்கத்திலேயே முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 229.09 புள்ளிகள் குறைந்து 27602.01 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 62.75 புள்ளிகள் குறைந்து 8292.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

தங்கம் 10 கிராம் தங்கத்தின் விலை 132 ரூபாய் குறைந்து 27,059 ரூபாய்க்கும். ஒரு பேரல் கச்சா என்ணெயின் விலை 19 ரூபாய் அதிகரித்து 3,833 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.34 ரூபாயாக உள்ளது. 

உலக சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு குறைவது ஆகியவைகள் இந்திய சந்தை இறக்கத்தில் வர்த்தகமாக காரணமாக கருதப்படுகிறது. மும்பை பங்கு சந்தையில் 1130 பங்குகள் இறக்கத்திலும், 1746 பங்குகள் ஏற்றத்திலும், 98 பங்குகள் நிலையாகவும் இருக்கிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டியில் 17 பங்குகள் அதிகரித்தும், 33 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.


ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஐ டி எஃப் சி 2.31%
டெக் மஹிந்திரா 1.88%
ஹிண்டால்கோ 1.20%
கோல் இந்தியா 1.10%
கோடக் பாங்க் 0.94%

இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஜிண்டால் ஸ்டீல் 3.73%
ஓ என் ஜி சி 3.32%
டாடா ஸ்டீல் 3.12%
ரிலையன்ஸ் 2.92%
 
 
 
11.00 மணி நிலவரம்

இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவிலேயே வர்த்தகமாகிறது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 201.54 புள்ளிகள் குறைந்து 27629.56 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 60.10 புள்ளிகள் குறைந்து 8295.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
 

10 கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் குறைந்து 27,116 ரூபாய்க்கும். ஒரு பேரல் கச்சா என்ணெயின் விலை 15 ரூபாய் அதிகரித்து 3,829 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.13 ரூபாயாக உள்ளது.


மும்பை பங்கு சந்தையில் 780 பங்குகள் ஏற்றத்திலும், 1358 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. அதெ போல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டியில் 10 பங்குகள் ஏற்றத்திலு, 40 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. உலக பங்கு சந்தைகளில் மந்த நிலை இன்னும் நீடிக்கிறது.

 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
பி ஹெச் இ எல் 2.45%
டெக் மஹிந்திரா 1.11%
அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் 0.68%
ஹெச் யூ எல் 0.24%
எம் அண்ட் எம் 0.23%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயின் இந்தியா 2.51%
ஜிண்டால் ஸ்டீல் 2.28%
கெயில் 2.18%
லார்சன் 1.79%

இன்ஃபோசிஸ் 1.76% 

 

9.30 மணி நிலவரம்

 
இந்திய பங்கு சந்தைகள் இன்றைய நாளின் துவக்கத்தில் சரிவில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 203.83 புள்ளிகள் குறைந்து 27627.27 புள்ளிகள் என்ற அளவிலும்,தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 59.35 புள்ளிகள் குறைந்து 8296.30 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 32 ரூபாய் அதிகரித்து 27,191 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 129 ரூபாய் அதிகரித்து 3,814 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.12 ரூபாயாக உள்ளது.
 
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் அனைத்தும் இன்று மந்த நிலையிலேயே வர்த்தகமாகி வருகின்றன.இன்றைய வர்த்தகத்தில் 315 பங்குகள் விலை அதிகரித்தும், 212 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.62%
பிபிசிஎல் 1.15%
பார்தி ஏர்டெல் 0.88%
சன் பார்மா 0.85%
கோடக் மஹிந்திரா 0.57%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கெயில் 2.14%
டாடா மோட்டார்ஸ் 1.81%
கெயின் இந்தியா 1.56%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 1.51%
பி ஹெச் இ எல் 1.38%

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ