Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலை 3 நாட்களில் பவுன் ரூ. 500 உயர்வு!

தங்கத்தின் விலை  3 நாட்களில் பவுன் ரூ. 500 உயர்வு!

தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் ரூ.500 மேல் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு சவரன் ஆபரண (22 காரட்) தங்கத்தின் விலையானது ரூ. 20080 என்ற நிலையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 2500 ரூபாய்க்கு மேல் விலை அதிகரித்து ரூ.2510 என்ற நிலையில் விற்பனையாகிறது.

 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 62 ரூபாய்க்கு மேல் உள்ளது. மேலும் நேற்று (10.12.2014) அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளின் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. மேலும் சீனா மற்றும் கிரேக்க நாடுகளில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம்.
மேலும் எஸ்பிடிஆர் கோல்டு டிரஸ்ட் இடிஎஃப் சுமார் 3 டன் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளது. இந்த ஃபண்ட் மொத்தமாக 724.80 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது. இது தான் உலகின் மிக பெரிய ஃபண்டாகும். தங்கத்தின் விலையான இந்த ஃபண்டின் இருப்பு விகிதத்தின் அடிப்படையில் அமையும்.
பெரும்பாலான முதலீட்டாளர் ஈக்விட்டி சந்தையில் ஏற்படும் ரிஸ்கை தவிர்ப்பதற்காக தங்கத்தின் முதலீடு செய்வார்கள். மேலும் எஸ்பிடிஆர் கோல்டு இடிஎஃப் நிறுவனம் கையிருப்பை அதிகப்படுத்தியுள்ளதை ஒரு சென்டிமென்டாக எடுத்துக் கொண்டு, முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க ஆரம்பித்துள்ளர்கள்.

இதேபோல வெள்ளியின் விலையும் உயர ஆரம்பித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 38460க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.41.20க்கு விற்பனையாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ