Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டு இறைச்சி, பால் பொருட்களுக்கு ரஷ்ய தடை நீக்கம்

 மாட்டு இறைச்சி, பால் பொருட்களுக்கு ரஷ்ய தடை நீக்கம்

 
உக்ரைன் பிரச்சனையால் ரஷ்யா ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் இருந்து உணவு பொருட்களை வாங்கவில்லை. அதற்கு பதிலாக இப்போது இந்தியாவோடு ரஷ்யா தாராள வர்த்தக ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. ரஷ்யாவிற்கு மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்ய கடந்த வாரமும், பால் பொருட்கள் ஆகியவைகளை ஏற்றுமதி செய்ய இந்த வாரமும் ரஷ்யா இந்தியாவிற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
 
இந்திய ஏற்றுமதியாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏனெனில் ரஷ்யாவின் மொத்த இறக்குமதி 318 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில் உணவு பொருட்கள் மட்டும் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யபட்ட பொருட்களின் மதிப்பு வெறும் 2.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இந்தியாவில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இந்த ரஷ்ய ஒப்பந்தத்தால் இது இன்னும் வளரும் என்று எஃப் ஐ இ ஓயின் இயக்குநர் அஜய் சஹாய் தெரிவித்தார்.
 
ஏற்கனவே அமுல் நிறுவனம் ரஷ்யாவிற்கு சீஸ் மற்றும் உலர் பால் பவுடர்களை ஏற்றுமதி செய்ய கெலக்டிகா நிறுவனத்துடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் கோழி மற்றும் கோழி முட்டிகள், முட்டை பவுடர் போன்ற பொருட்களுக்கான தடையும் விளக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ