Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம்: இந்தியர்களின் இன்றைய மனநிலை என்ன?

தங்கம்: இந்தியர்களின் இன்றைய மனநிலை என்ன? 
 
தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வாங்குவோம் என இந்தியாவில் ஐந்தில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளர். இந்த விவரம் அதாவது சமீபத்தில் வேர்ல்டு கோல்டு கவுன்சில் மற்றும் பிக்கி நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. 
 
சர்வேயின் சிறப்பம்சங்கள்:

மொத்தம் 5 ஆயிரம் நபர்களிடம் எடுக்கப்பட்ட ச்ர்வேயில்.
 
* 19 சதவிகிதத்தினர் விலை உயர்ந்தாலும் தங்கத்தை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.
 
* 34 சதவிகிதத்தினரின் மன நிலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
 
* 14 சதவிகிதத்தினர் தங்கத்தின் விலை உயர்ந்தால் வாங்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்கள். 

* விலை அதிகரித்தால் தங்கத்தை விற்றுவிடுவோம் என 6 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
 
* 77 சதவிகிதத்தினர்  தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள். 

* 53 சதவிகிதத்தினர் ஆபரண தேவைகளுக்காவும், 50 சதவிகிதத்தினர் முதலீடு மற்றும் ஆபரணமாக இரண்டுக்கும் பயன்படுத்துவதகாக கூறியுள்ளார்கள்.

கடந்த ஐந்து வருடமாக இந்தியாவின் தங்கத்தின் தேவை 895 டன்னாக உள்ளது. இது உலக நாடுகளின் தங்க தேவையில் 26 சதவிகிதம் ஆகும். இந்தியா மிக குறைந்த அளவில் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியை நம்பியுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதற்கு அதிக இறக்குதியும்  ஒரு காரணம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ