Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேட்ஜெட் பார்வை! ஒப்போவின் ஒன் பிளஸ் ஒன்!

 கேட்ஜெட்!
ஒப்போவின் ஒன் பிளஸ் ஒன்! 


அதிகபடியான தொழில்நுட்பம், சிறப்பான டிசைன் என எந்தவிதத்திலும் குறையில்லாத ஸ்மார்ட் போனைதான் ஒரு கம்பெனியின் ‘Flagship’ ஸ்மார்ட் போன் என்பார்கள். சாம்சங்கின் கேலெக்ஸி எஸ்5, ஆப்பிளின் ஐபோன் 6, ஹெச்டிஸியின் ஒன் எம்8, எல்ஜியின் ஜி3 ஆகியவைதான் இன்றைய டெக் உலகத்தின் ‘Flagship’ ஸ்மார்ட் போன்களாக இருக்கின்றன. 


இந்த போன்கள் சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட் போன்களின் விலை மிக அதிகம். சமீபத்தில் இதை முறியடிக்கும் வகையில் ஓப்போ என்ற மொபைல் (Oppo) நிறுவனம் ‘ஒன் பிளஸ் ஒன்’ என்ற புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. ‘Flagship Killer’ என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 21,999. 


வடிவமைப்பு!
கவர்ச்சியான இந்த போனில் சீரான முன்புற ‘பிளாக்’ பிரேமுடன் மெட்டல் ரிம்மும் அமைந்துள்ளது. கீழ்பகுதியில் மூன்று ‘capacitive’ பட்டன்களை கொண்டுள்ளது. பல வண்ணங்களை கொண்ட LED Notification-ம் அடங்கும். ‘Sandstone Black’ என்ற இந்த மாடலின் பின்புறம் கரடுமுரடான தன்மையை கொண்டுள்ளது. இது கையால் பிடிப்பதற்கு வசதியாக இருந்தாலும், பாக்கெட்டில் வைத்து எடுக்கும்போது அதில் உள்ள அழுக்கு முழுவதையும் ஈர்த்துவிடுகிறது.


டிஸ்ப்ளே!
இந்த போன் 5.5  இன்ச் 1080*1920 (401 PPI) ரெஸல்யூஷனை கொண்ட சிறப்பான  டிஸ்ப்ளேவுடன் வெளிவந்திருக்கிறது. இந்த ஸ்க்ரீன், டிஸ்ப்ளே பேனலோடு சேர்ந்து அமைந்துள்ளது. இதனால் இந்த ஸ்க்ரீனின் வலிமை அதிகப்படும்.


ப்ராஸஸர்!
தற்போது ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குவால்காம் ப்ராஸஸர்கள்தான் இந்த  போனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த Qualcomm Snapdragon 801Soc ப்ராஸஸர் நான்கு CPU கோர்களை கொண்டுள்ளது. 2.5 GHz-ல் இயங்கக்கூடிய இந்த ப்ராஸஸரோடு பிரத்யேகமான Adreno 330 GPU என்ற கிராபிக்ஸ் ப்ராஸஸரும் அடங்கும். 3GB ரேமுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் எந்தக் குறைப்பாடும் இருக்காது. மேலும், 64GB இன்டர்னல் மெமரியும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். 


கேமரா!
13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும், 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் 4K வீடியோவை ரெகார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளது.


பேட்டரி!
3100 mAh பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் சாதாரண பேட்டரிகளைவிட சக்தி வாய்ந்தது. சுமார் 6 மணி நேரம் வரை இந்த பேட்டரி உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஓ.எஸ்!
இந்த ஸ்மார்ட் போனில் சிறப்பம்சம் அதன் ஓஎஸ்தான். ‘CyanogenMod’ என்ற பிரத்யேகமான ஆண்ட்ராய்டு ஓஸ் கொண்டு இந்த ஸ்மார்ட் போன் இயங்குகிறது. ஆனால், இந்திய மார்கெட்டில் இந்த ஸ்மார்ட் போன் CynagonMod ஓஎஸ்ஸோடு விற்கப்படுவதில்லை. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து வேறொரு பிரதேய்கமாக வடிவமைகப்படுள்ள ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை கொண்டுதான் இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவில் இயங்குகிறது. இந்த ஓஎஸ்-ஐ கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப பல ஆப்ஷன்களை மாற்றிக்கொள்ளலாம்.


ஆண்ட்ராய்டு 5.0 ஓ.எஸ் விரைவில் இந்த போன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

 

பிளஸ்:

* சிறப்பான தொழில்நுட்பம்.
* டிஸ்ப்ளே
* விலை
* ஓ.எஸ் 


மைனஸ்:
* சுமாரான கேமரா
* பேட்டரி * டிசைன்

 

கிஸோர் பிரசாத் கிரண்.


 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ