Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்: 20 ஆண்டுகள் - 22 லட்சம் முதலீட்டாளர்கள்..!

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்:
20 ஆண்டுகள் - 22 லட்சம் முதலீட்டாளர்கள்..!
 
ஆதித்ய பிர்லா ஃபைனான்சியல் சர்வீசஸ் குழுமத்தை சேர்ந்த பிர்லா சன் லைஃப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், 20 ஆண்டுகள் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் அது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் நான்காவது பெரிய நிறுவனம் என்கிற நிலையை எட்டி இருக்கிறது.  
 
மேலும், நிர்வகிக்கப்படும் தொகை ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்துகும் அதிகமாக உள்ளது. 
''இந்த வளர்ச்சி நிறுவனத்தின் நிதி மேலாண்மை திறமையை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது" என்று ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி (ஃபைனான்சியல் சர்வீசஸ்), அஜெய் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

பிர்லா சன் லைஃப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ. பாலசுப்பிரமணியன், ''20 ஆண்டுகளில் நிர்வகிக்கும் தொகை ரூ. 1 லட்சம் கோடி, 22 லட்சம் முதலீட்டாளர்கள் என்பது 'டீம் ஒர்க்' மூலம்தான் சாத்தியமாகி இருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள் எங்களை சந்தோஷப்படுத்தும் அதேநேரத்தில், முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது மூலம் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு தயாராகி இருக்கிறோம்" என்றார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ