Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றைய... பங்குச் சந்தை நிலவரம்

9.30 மணி நிலவரம்



இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 123.05 புள்ளிகள் குறைந்து 26658.39 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 44.90 புள்ளிகள் குறைந்து, 8022.70 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3 டாலர் உயர்ந்து, 1,197 டாலராக வர்த்தகம் ஆகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 126 ரூபாய் குறைந்து 27,194 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒரு பீப்பாய் பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை 59.86 டாலராக குறைந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு குறைந்ததில்லை. எம்சிஎக்ஸ் சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 3,573 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது .

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.81-க்கு வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

ஐ.டி, மெட்டல், ஆயில் மற்றும் காஸ் , எஃப்எம்சிஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. வங்கி, மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்கு சந்தையில் 1,515 பங்குகள் வர்த்தகமாகின்றன, அதில் 645 பங்குகள் ஏற்றத்திலும், 820 பங்குகள் இறக்கத்திலும், 50 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.


ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
டாடா ஸ்டீல் - 1.24%
ஹெச்டிஎஃப்சி - 0.92%
டிசிஎஸ் - 0.82%
சேசா ஸ்டெர்லைட் - 0.59%
இன்ஃபோசிஸ் - 0.53%


இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
ஹிண்டால்கோ - 3.45%
எஸ்பிஐ - 2.64%
பார்தி ஏர்டெல் - 2.16%
சிப்லா - 2.05%
ஐசிஐசிஐ பேங்க்  - 2.03%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ