Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தை முடிவு: இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

3.30 மணி நிலவரம்

இன்றைய சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 71.31 புள்ளிகள் குறைந்து 26710.13 புள்ளிகளாக வர்த்தகமானது.  தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 37.80 புள்ளிகள் குறைந்து 8029.80 புள்ளிகளாக வர்த்தகமானது.
 
ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகிறது. தைவான், கொரியா, , சீனா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் டியூரபுள்ஸ், ஹெல்த் கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ், பொதுத் துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
 

10 கிராம் தங்கத்தின் விலை 79 ரூபாய் குறைந்து 27,115 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 66 ரூபாய் குறைந்து 3,507 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது . அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.63 வர்த்தகமாகிறது.

இன்றைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தையில் 2,823 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,012 பங்குகள் ஏற்றத்திலும், 1715 பங்குகள் இறக்கத்திலும், 90 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தேசிய பங்கு சந்தையில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.


ஏற்றப்  பங்குகள்:

சேசா ஸ்டெர்லைட்                                     - 3.77%
ஓ என் ஜி சி                                                      - 2.22%
என் எம் டி சி                                                    - 2.16%
எஸ் பி ஐ                                                          - 2.08%
ஹிண்டால்கோ                                            - 1.62%

இறக்கப்  பங்குகள்:

டி எல் எஃப்                                                      - 4.06%
ஏசியன் பெயிண்ட்ஸ்                                - 3.63%
கோட்டக் மஹிந்திரா                                - 3.03%
சிப்லா                                                               - 2.87%
கெயின் இந்தியா                                         - 2.74%

 
2:00 மணி நிலவரம்:

இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவிலேயே வர்த்தகமாகின்றன. இருந்தாலும் சரிவிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 11.48 புள்ளிகள் குறைந்து 26769.77 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 20.75 புள்ளிகள் குறைந்து 8036.80 புள்ளிகள் என்ற அளவிலும்  வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 94 ரூபாய் குறைந்து 27,100 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 37 ரூபாய் குறைந்து 3,536 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது . அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.59 ரூபாயாக உள்ளது.

மும்பை பங்கு சந்தையில் 2,758 பங்குகள் வர்த்தகமாகின்றன, அதில் 989 பங்குகள் ஏற்றத்திலும், 1679 பங்குகள் இறக்கத்திலும், 90 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்கு சந்தையில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 31 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.


விலை அதிகரித்த பங்குகள்:

சேசா ஸ்டெர்லைட் - 3.74%
எஸ் பி ஐ - 3.06%
என் எம் டி சி - 2.38%
ஓ என் ஜி சி - 2.26%
டாடா ஸ்டீல் - 2.00%

விலை குறைந்த பங்குகள்:

டி எல் எஃப் - 3.88%
ஐ டி சி - 3.44%
சிப்லா - 3.21%
கோட்டக் மஹிந்திரா 2.83%
ஏசியன் பெயிண்ட்ஸ் - 2.77%
 
1:00 மணி நிலவரம்
 

இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவிலேயே வர்த்தகமாகின்றன.
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 54.97 புள்ளிகள் குறைந்து 26726.47 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 30.30 புள்ளிகள் குறைந்து 8037.30 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 72 ரூபாய் குறைந்து 27,122 ரூபாய்க்கும். கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 3,533 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது .
 
பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 1.20 டாலர்கள் குறைந்து 59.86 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.59 ரூபாயாக உள்ளது.
 
தேசிய பங்குச் சந்தை நேற்றும், இன்றைய நாளின் துவக்கத்திலும் சரிவை அதிகமாக சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தேசிய பங்குச் சந்தை 1.3 சதவிகிதம் சரிவிலிருந்து மீண்டு தற்போது 0.4 சதவிகித சரிவுக்கும், மும்பை பங்குச் சந்தை 1.1 சதவிகிதத்திலிருந்து 0.3 சதவிகிதத்துக்கும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய வர்த்தகத்தில் ஆசிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகிறது., ஆட்டோமொபைல், ஹெல்த்கேர் துறை பங்குகள் விலை குறைந்து காணப்படுகின்றன.
 
 
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
டாடா ஸ்டீல் - 2.89%
என் எம் டி சி - 2.57%
சேசா ஸ்டெர்லைட் - 2.56%
ஓ என் ஜி சி - 2.10%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் - 1.74%
 
இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
கோட்டக் மஹிந்திரா 3.39%
டி எல் எஃப் - 2.98%
சிப்லா - 2.86%
டாடா பவர்ஸ் - 2.50%
ஐ டி சி - 2.48%
 

காலை 11 மணி நிலவரம்:

 

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 101.31 புள்ளிகள் குறைந்து 26680.13 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 40.95 புள்ளிகள் குறைந்து 8026.65 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.


10 கிராம் தங்கத்தின் விலை ஒரு ரூபாய் குறைந்து 27,193 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 3,503 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது . அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.77-க்கு வர்த்தகமாகிறது.

அமெரிக்க பங்குச் சந்தைகளும், ஆசியாவில் ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹேங்செங், தைவான் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
என்எம்டிசி - 2.72%
டாடா ஸ்டீல் - 2.21%
சேசா ஸ்டெர்லைட் - 1.27%
ரிலையன்ஸ் - 0.99%
கிராஸிம் - 0.42%


இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள்
லுபின் - 3.53%
ஏசியன் பெயின்ட்ஸ் - 2.55%
டாடா பவர்ஸ் - 2.44%
ஜிண்டால் ஸ்டீல் - 2.39%
சிப்லா - 2.39%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close