Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் சந்தைகள்: பங்குகளை வாங்கி குவிக்கும் எல்ஐசி

 சரிவில் சந்தைகள்: பங்குகளை வாங்கும் எல்ஐசி

 
தேசிய பங்குச் சந்தை நேற்றும், இன்றைய நாளின் துவக்கத்திலும் சரிவை அதிகமாக சந்தித்து வந்தது. எப்போதும் சந்தை சரியும் போது பங்குகளை வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் எல்ஐசி நிறுவனம் இந்த முறையும் வாங்கத்துவங்கியதால் சந்தையின் சரிவு சற்று குறைந்து காணப்பட்டது. 
 
எல்ஐசியின் இந்த செயலால் சந்தை 8000 புள்ளிகளுக்கு கீழ் செல்லாமல் வர்த்தகமானது அதோடு சந்தையின் சரிவும் குறைந்தது. இதற்கு எல்ஐசி பங்குகளை வாங்குவதே காரணம் என்று கூறப்படுகிறது.
 
தேசிய பங்குச் சந்தை 1.3 சதவிகிதம் சரிவிலிருந்து மீண்டு தற்போது 0.4 சதவிகித சரிவுக்கும், மும்பை பங்குச் சந்தை 1.1 சதவிகிதத்திலிருந்து 0.3 சதவிகிதத்துக்கும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ