Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

60 டாலருக்கு கீழ் சரிந்தது கச்சா எண்ணெய்

60 டாலருக்கு கீழ் சரிந்தது கச்சா எண்ணெய்

 
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகமான வீழ்ச்சியை கண்டு வருகிறது. காரணம் ஓபிஇசி உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் இருப்பதால் கச்சா எண்ணெயின் விலை முன்பு இல்லாத அளவிற்கு குறைந்து வர்த்தகமாகிறது.
 
 அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை ஐந்தரை வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து ஒரு பேரல் 54 டாலருக்கு வர்த்தகமாகிறது.
 
பிரன்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட பேரலுக்கு 20 டாலர்களுக்கும் மேல் குறைந்து 59 டாலருக்கு வர்த்தகமாகிறது.
 
கடந்த ஜூன் மாதம் 115 டாலருக்கு வர்த்தகமான பிரன்ட் கச்சா எண்ணெய் சரிந்து தற்போது 59 டாலருக்கு வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது
 
ஓபிஇசி உறுப்பினர்களாக அல்ஜிரியா மற்றும் வெனிசுலா அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உற்பத்தி குறைப்பு குறித்து பேச இருப்பதாக தெரிந்தாலும் இதனை சவுதி அரேபியா பொன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
அப்படி சம்மதிக்கும் பட்சத்தில் 2015ல் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ