Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஸ்தாரா விமானங்கள் பறக்கத் தயார்!

 விஸ்தாரா விமானங்கள் பறக்கத் தயார்!


இந்தியாவின் டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து தொடங்கிய நிறுவனம் தான் இந்த விஸ்தாரா. விஸ்தாராவின் பங்குகளில் டாடா குழுமம் 51 சதவிகிதமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவிகித பங்குகளையும் வைத்திருக்கின்றனர்.

நிறுவனம் தொடங்கி ஒன்பது மாதங்களுக்கு பிறகு விஸ்தாரா நிறுவனத்திற்கு பறக்கும் அனுமதியை இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழங்கியுள்ளது. இதன் பயணிகள் விமான சேவைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

விஸ்தாராவின் தலைமையகமாக புது டெல்லி இருக்கிறது. இதன் முதல் ஆண்டில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கோவா, சண்டிகர், ஶ்ரீநகர், ஜம்மு, பாட்னா ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை வழங்க உள்ளது.

தற்போது விஸ்தாரா நிறுவனத்திடம் இரண்டு ஏர்பஸ் ஏ320 இருக்கின்றன. அதை வரும் 2015 மார்ச் மாதத்திற்குள் இன்னும் மூன்று ஏர்பஸ் ஏ320ஐ வாங்க இருக்கிறது. விஸ்தாராவின் முதல் ஆண்டில் ஐந்து ஏ320 விமானம் உட்பட 87 விமானங்களை இயக்க உள்ளது, அதே போல் அடுத்த நான்கு ஆண்டுகளில் 301 விமானங்களை இயக்க திட்டமிட்டிருக்கிறது. அது மட்டுமின்றி அடுத்த நான்கு ஆண்டுகளில் 20 ஏ320 ரக விமானங்களை குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. அதில் ஏழு எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தும் ஏ320 என்.இ.ஓ ரக விமானங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ