Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் பொருளாதார சீர்திருத்தம்: நாட்டின் வளர்ச்சி 6.3% !

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2015-ம் ஆண்டில் 6.3 சதவிகிதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்திருக்கிறது. எனினும், 2014-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என அது சொல்லியிருக்கிறது.

ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஆசிய வளர்ச்சி வங்கி தனது அறிக்கையைக் கடந்த புதன்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்து சொல்லி இருக்கிறது. ஆனால், ஆசியாவின் வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என கடந்த 2014 செப்டம்பரில் ஆசிய வளர்ச்சி வங்கி சொல்லி இருந்தது. இப்போது அந்தக் கணிப்பை .1 சதவிகிதம் என்கிற அளவில் குறைத்துச் சொல்லி இருக்கிறது ஆசிய வளர்ச்சி வங்கி.

இதேபோல, 2015-ல் ஆசியாவின் வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால், தற்போது அதை 6.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று திருத்திச் சொல்லி இருக்கிறது.

இந்த நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டில் எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி குறைவாகவே இருந்தது. இருப்பினும் கச்சா எண்ணெய் விலை குறைவால் ஆசியாவின் வளர்ச்சி விகிதங்கள் மாற்றமடைய வாய்ப்பிருக்கிறது. ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. கச்சா எண்ணெய்யின் விலை குறைப்பு இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், 2015 முதல் இதன் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு இருப்பதாக ஏடிபி கூறி இருக்கிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2014-ம் ஆண்டில்  7.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 7.4 சதவிகிதத்துக்கும், 2015-ம் ஆண்டுக்கான வளர்ச்சி 7.4 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதத்துக்கும் குறைத்திருக்கிறது. சீனாவில் சொத்துகளின் விலை மதிப்பு குறைவு மற்றும் ஸ்பிள் ஓவர் தாக்கம் காரணமாக கட்டுமானத் துறையின் வளர்ச்சி குறைந்திருக்கிறது என்று கூறியுள்ளது.

2014-ல் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவிகிதம் இருக்கும் என்றும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் இந்த வளர்ச்சி 6.3 சதவிகிதம் வளர்ச்சியை இந்தியா அடையும் என்றும் ஏடிபி கூறி இருக்கிறது.

தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி முன்பிருந்ததைவிட 2014 மற்றும் 2015-ல் இன்னும் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறது. இந்த நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை இதற்கு காரணமாக அமையும் என்று கூறியுள்ளது.. தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி 2014-க்கு நிர்ணயித்த 4.6% என்ற இலக்குக்கு பதிலாக 4.4% சதவிகிதம் வளர்ந்திருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ