Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ளாக் டீலில் கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் பங்கு!

லாஜிஸ்டிக்ஸ் துறையை சார்ந்த கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் (Gateway Distriparks) நிறுவனத்தின் பங்கு விலை 8% உயர்ந்து, ஒரு பங்கின் விலை ருபாய் 344-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் பங்குகள் ப்ளாக் டீல் முறையில் கைமாறியதால் இந்த பங்கின் விலை உயர்ந்தது.

கிட்டத்தட்ட 1.27 மில்லியன் பங்குகள், அதாவது இந்த நிறுவனந்தின் 1.16% பங்குகள் ரூபாய் 334.50-க்கு இன்று கைமாறியது. இந்தப் பங்கை வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

 கடந்த இரண்டு நாட்களில் இந்த நிறுவனத்தின் பங்குகள் நாளொன்றுக்கு 17,000 பங்குகள் எனும் எண்ணிக்கையில்தான் வர்த்தகமாகி வந்தது. ஆனால், இன்று மட்டும் என்.எஸ்.இ.யில் 5.75 லட்சம் பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ