Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபாஸில் நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம்

 ஃபாஸில் நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம்

 
அமெரிக்காவை சேர்ந்த ஃபாஸில்  எனும் கடிகார நிறுவனம் 2017ல் இந்தியாவில் 25 இடங்களில் சில்லறை  விற்பனையைத்  தொடங்க ரூபாய் 40 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தின் தரமான கடிகாரங்களோடு, தோல் பைகள் (ஆண் மற்றும் பெண்களுக்கு), ஆண்களுக்கான பணப்பைகள், பெண்களுக்கான ஆபரணங்கள் ஆகியவைகள் சில்லறை கடைகள் மூலம் நாடு முழுவதும் விற்கப்படும்.
 
தங்கள் நிறுவனத்தை ஒரு கடிகார நிறுவனம் என்பதிலிருந்து ஒரு லைஃப் ஸ்டைல் பிராண்ட் நிறுவனமாக மாற்ற விரும்புவதாகவும், தற்போது வெளி வரும் கடிகாரமல்லாத பொருட்களிலும் இனி தாங்கள் கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஃபாஸில் நிறுவன பொருட்களை தங்கள் சில்லறை கடைகளில் மட்டுமெ விற்கப்போவதாகவும் ஃபாஸில் நிறுவன இந்திய தலைவர் சுமித் கோஷ் தெரிவித்தார்.
 
உலக அளவில் ஃபாஸிலின் விற்பனையில்  கடிகாரமல்லாத பொருட்களின் விற்பனை 40 சதவிகிதமாக உள்ளது.  ஃபாஸிலின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 40 சதவிகிதமாக இருக்கிறது. ஒரு பிராண்டில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு 2013ல் இந்தியா அனுமதி அளித்ததற்கு பின் மட்டும் ஆறு சில்லறை கடைகளை திறந்திருக்கிறது.
 
இந்த நிறுவனத்திற்கு மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களில் கடைகள் இருக்கின்றன, தங்கள் புதிய கடைகளை ஹைதராபாத், அஹமதாபாத், சண்டிகர், சென்னை, ஜெய்பூர் மற்றும் சூரத் ஆகிய இடங்களில் திறக்க முடிவு செய்திருக்கிறது.
தற்போது இவர்கள் நிறுவனத்தின் கடிகாரங்களை மல்ட்டி பிராண்ட் ரீடெயில் கடைகளான ஷாப்பர்ஸ் ஸ்டாப் மற்றும் லைஃப் ஸ்டைல் மூலமும் விற்பனை செய்கிறார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ