Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

3.30 மணி நிலவரம்
 
இன்றைய நாளின் முடிவில் மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 413.44 புள்ளிகள் உயர்ந்து 27129.52 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிவுற்றது.தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி129.50புள்ளிகள் உயர்ந்து 8159.30 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிவுற்றது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் அதிகரித்து 26,974 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 51 ரூபாய் குறைந்து 3,679 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.19 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நேற்றைய வர்த்தகத்தை காட்டிலும் இன்று அமெரிக்காவின் டாலர் மதிப்பு சற்று குறைந்திருக்கிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 2136 பங்குகள் ஏற்றத்திலும், 692 பங்குகள் இறக்கத்திலும், 99 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின. தேசிய பங்குச் சந்தைகளில் 45 பங்குகள் ஏற்றத்திலும், 5 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின. மொத்தத்தில் மும்பை பங்குச் சந்தை 1. சதவிகித வளர்ச்சியையும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1. சதவிகித வளர்ச்சியையும் கண்டு வர்த்தகம முடிவுற்றிருக்கிறது.
 
நிலக்கரி சுரங்கங்கள் எலம் விடப்படுவது தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள், அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் ஆகியவைகள் நாளையை இந்திய சந்தையின் வர்த்தகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஏற்றப் பங்குகள்
 
ஜிண்டால் ஸ்டீல் 7.48%
பி ஹெச் இ எல் 5.02%
பேங்க் ஆஃப் ப்ரோடா 4.46%
கெயின் இந்தியா 4.45%
கெயில் 4.16%
 
இறக்கப் பங்குகள்
 
க்ராசிம் 0.77%
எம் அண்ட் எம் 0.57%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 0.29%

ஹெச் யூ எல் 0.05%

 

2.45 மணி நிலவரம்

இந்தியா நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டிக்கு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் நடக்கும் மூன்றாவது பெரிய மாற்றமாகும். மோடியின் 2014 பாராளுமன்ற தேர்தல் வெற்றி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவைகள் முதல் இரண்டு பெரிய மாற்றங்களாகும்.

அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் வர்த்தகமாகத் தொடங்கிய பின் ஆசிய பங்குச் சந்தைகளும் எற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கியுள்ளது, அதே போல் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி பொருளாதார சலுகைகளை நீக்குவதில் பொறுமையுடன் கையாளுவதாக உறுதியளித்திருக்கிறது. இந்த காரணங்களாலேயே இன்றைய சந்தையின் போக்குக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்கின்றனர். 
 

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 419.63 புள்ளிகள் உயர்ந்து 27129.52 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி130.50 புள்ளிகள் உயர்ந்து 8160.25 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 44 ரூபாய் அதிகரித்து 26,999 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 103 ரூபாய் குறைந்து 3,627 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.25 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்:

ஜிண்டால் ஸ்டீல்             7.48%
பி ஹெச் இ எல்                 4.86%
ஹிண்டால்கோ                4.76%
பி என் பி                               4.23%
கெயில்                                 4.13%


இறக்கப் பங்குகள்:


டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்            0.72%
ஹெச் சி எல் டெக்                           0.18%
க்ராசிம்                                                  0.03%
எம் அண்ட் எம்                                   0.01

 
மதியம் 1:00 மணி நிலவரம்:
 
இறக்கத்தில் வர்த்தகமான பங்குச் சந்தைகள் இன்றைய நாளின் துவக்கத்திலிருந்தே ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன.27000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமான சென்செக்ஸ் மீண்டும் 27000 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகிவருகிறது.
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 290 புள்ளிகள் அதிகரித்து 27000 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 87 புள்ளிகள் அதிகரித்து 8117 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 27,010 ரூபாய் என்ற அளவிலும், கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 3,621 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.32 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஜின்டால் ஸ்டீல் 6.86
கெயில் 4.64
ஹின்டால்கோ 4.42
பிஹச்இஎல் 4.26
பிஎன்பி 3.77
 
விலை குறைந்த பங்குகள்
 
கிராஸிம் -1.00
அல்ட்ராடெக் சிமெண்ட் -0.59
ஹச்டிஎஃப்சி -0.43
சன் பார்மா -0.35
ஹீரோ மோட்டோகார்ப் -0.24
 
காலை 11:30 மணி நிலவரம்
 
இறக்கத்தில் வர்த்தகமான பங்குச் சந்தைகள் இன்றைய நாளின் துவக்கத்திலிருந்தே ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன.27000 புள்ளிகளை கடந்து வர்த்தகமான சென்செக்ஸ் மீண்டும் சற்று குறைந்து 26918 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி காலையிலிருந்து 80 புள்ளிகள் அதிகரித்து 8089 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
வங்கி பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமாகிரது. குறிப்பாக எஸ்பிஐ,ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகிறது.10 கிராம் தங்கத்தின் விலை 27,023 ரூபாய் என்ற அளவிலும், கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 3,627 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.34 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
பிஹச்இஎல் 4.14
கெயில் 4.14
ஹின்டால்கோ 3.50
ஜின்டால் ஸ்டீல் 3.49
டாடா பவர் 3.12
 
விலை குறைந்த பங்குகள்
 
கிராஸிம் -1.10
ஹச்.சி.எல் டெக் -0.97
ஹீரோ மோட்டோகார்ப் -0.88
பிபிசிஎல் -0.84
பவர் கிரிட் கார்ப் -0.76

 

 காலை 9:30 மணி நிலவரம்

 
இறக்கத்தில் வர்த்தகமான பங்குச் சந்தைகள் இன்றைய நாளின் துவக்கத்திலிருந்தே ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன.மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 338 புள்ளிகள் அதிகரித்து 27048 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 8130 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
வங்கி பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமாகிரது. குறிப்பாக எஸ்பிஐ,ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகிறது.10 கிராம் தங்கத்தின் விலை 239 ரூபாய் குறைந்து 26,955 ரூபாய் என்ற அளவிலும், கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 3,730 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.23 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
பிஎன்பி 3.20
பிஹச்இஎல் 3.12
கெய்ர்ன் இந்தியா 3.08
 
விலை குறைந்த பங்குகள்:
 
ஐடிசி -0.61
ஹச்யூஎல் -0.43
கோல் இந்தியா -0.14
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ