Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2020-ம் ஆண்டு 50 கோடி இளைஞர்கள் வேலை தேட உள்ளார்கள் - பேராசிரியர் நந்தகுமார்

 2020-ம் ஆண்டு 50 கோடி இளைஞர்கள்
வேலை தேட உள்ளார்கள் - பேராசிரியர் நந்தகுமார்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று சேலம் பசுமை நகரக் கூட்டமைப்பு நிறுவனர் செந்தில் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.



சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்ப்பில் நடைபெற்று வரும் மக்கள் கருத்தொளி இயக்க இரண்டாம் நாள் நிகழ்ச்சியான பிரதமரின் "தூய்மை இந்தியா" பற்றிப் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும் பிரதமரின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தில் முழுமையாக ஈடுபட ஒவ்வொரு குடிமகனும் தங்கள் இல்லங்களில் இருந்து பணியைத் தொடங்க வேண்டும் என்றார். அப்போதுதான் அந்தப் பணி வீட்டிலிருந்து தொடங்கித் தெருமுனைகள் சுத்தப்படுத்தப்பட்டுத் தூய்மையான இந்தியாவாக மாறும் என்றார்.

முன்னதாக கருத்தொளி இயக்கத்தின் ஒரு பகுதியாக வாழப்பாடி பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தூய்மை பணியை மேற்கொண்டார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். நந்தகுமார் பேசுகையில், 2020-ம் ஆண்டில் 50 கோடி இளைஞர்கள் வேலை தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைபெற்று வரும் கருத்தொளி இயக்க இரண்டாம் நாள் நிகழ்ச்சியையட்டி இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் தெரிவித்தார். மேலும் இத்தகைய சூழல்நிலையில் இருந்து இளைஞர்கள் விடுபட்டு வேலை தேடுவதற்குப் பதிலாக மத்திய மாநில திட்டங்களைத் தெரிந்துகொண்டு தொழில் முனைவோராக மாறி மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP