Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2014-ன் மிகப்பெரிய வெற்றியாளர்கள்!

நடப்பு 2014-ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தவர்களின் பட்டியலை வெல்த்-எக்ஸ் ஆய்வு நிறுவனம் வெள்ளியிட்டது. இதில் அலிபாபா.காம் நிறுவனர் ஜாக்மா 18.5 பில்லியன் டாலர் லாபத்துடன் முன்னணியில் இருக்கிறார். இவரின் சொத்து 173% அதிகரித்திருப்பதாகவும், 60,000 டாலரில் ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா டாட்காமின் தற்போதைய மதிப்பு 29.2 பில்லியன் டாலராக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         

இந்த பட்டியலில் பங்குச் சந்தை ஜாம்பவானான வாரன் பஃபெட் 13.5 பில்லியன் டாலர் லாபத்துடன் இரண்டாவது இடத்திலும், மைக்ரோசாஃப் உரிமையாளர் பில்கேட்ஸ் 10.5 பில்லியன் டாலர் லாபத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ