Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டொரன்ட் பவர்ஸ் மற்றும் டொரன்ட் கேபிள்ஸ் பங்குகள் ஏற்றம்

 டொரன்ட் பவர்ஸ் மற்றும் டொரன்ட் கேபிள்ஸ் பங்குகள் ஏற்றம்


 இன்று டொரன்ட் பவர்ஸ் மற்றும் டொரன்ட் கேபிள்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 15% அதிகரித்து 52 வார உச்சத்தை தொட்டிருக்கிறது.  138 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த டொரன்ட் கேபிள்ஸ் பங்குகள் 17 சதவிகிதம் அதிகரித்து 158 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த நிறுவன பங்குகள் பகல் 12.32 மணிக்கு 20,000 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. இதன் வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

இன்று 163 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய டொரன்ட் பவர்ஸ் பங்குகள் 10 சதவிகிதம் உயர்ந்து அதன் 52 வார கால புதிய உச்சமான 179 ரூபாயை எட்டி இருக்கிறது. மொத்தமாக 3.08 மில்லியன் பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக ஒரு மில்லியன் பங்குகள் தான் வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

டொரன்ட் எனர்ஜி நிறுவனத்தோடு டொரன்ட் பவர் மற்றும் டொரன்ட் கேபிள்ஸ் ஆகிய நிறுவனங்களை இணைக்க இந்த ஆண்டு மே மாதம் டொரன்ட் பவர் போர்ட் அனுமதி அளித்திருக்கிறது. டொரன்ட் கேபிள்ஸின் (முழுமையாக பணம் செலுத்திய) 20 பங்குகளுக்கு 19 டொரன்ட் பவர்  பங்குகள் வழங்கப்படும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ