Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெங்காய விலை ஏற்றம்

 வெங்காய விலை ஏற்றம்

 
கடந்த டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து வெங்காயத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. தற்போது பெய்த மழையால் வெங்காயம் பயிர் செய்திருந்த நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதனால் நன்றாக விளைந்த வெங்காயங்களை சாகுபடி செய்ய முடியாமல் போய் வெங்காயத்தின் போக்குவரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
 
நேற்று மும்பையில் 100 கிலோ வெங்காயத்தின் விலை 2,100 ரூபாயாகவும், மொத்த வெங்காய வரவு 770 டன்களாக இருந்தது. இதே டிசம்பர் 1ஆம் தேதி அன்று இதன் விலை 1,270 ஆகவும், இதன் வரவு 1,250 டன்னாகவும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட 65 சதவிகித விலை ஏற்றமாகும்.
 
இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய பருவ மழை, வெங்காயத்தின் பயிர் செய்யும் காலத்தை தாமதப்படுத்தி விட்டது.  டிசம்பர் மாதம் 1அம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை 16% வெங்காய வரத்து குறைந்திருக்கிறது. அதே போல் பிம்பலாகன் மண்டியில் அதன் விலை 30 % உயர்ந்து 100 கிலோ வெங்காயத்திற்கு 1,700 ரூபாயாகவும், லசால்கான் மண்டியில் 100 கிலோவிற்கு 1,750 ரூபாயாகவும் வியாபாரமானது.
 
வெங்காய விலை
 
இடம் டிச 1 டிச 18 மாற்றம்
 
மும்பை 1,270 2,100 65.35
அஹமதாபாத் 1,300 1,900 46.15
பெங்களூரு 1,230 1,550 26.02
டெல்லி 1,500 1,755 17.0
கொல்கத்தா 2,000 2,250 12.5
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ