Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்க்கரை உற்பத்தி 47% வளர்ச்சி!

நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் 15-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 47% உயர்ந்துள்ளது. அதே சமயம் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் கரும்பு அரவையை ஆரம்பித்துள்ள சர்க்கரை ஆலைகள் 426-ஆக இருந்தன. தற்போது அது 442-ஆக் அதிகரித்துள்ளது. இதனாலேயே இன்றைய நிலையில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்திருக்கிறது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு பருவத்தில் 2.55 கோடி டன்னாக இருக்கும் எனவும், இது கடந்த 2013-14 பருவத்தில் 2.50 கோடி டன்னாக இருந்தது எனவும் அதன் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ