Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கில் இந்தியா முதலிடம், வாட்ஸ் அப்பில் பத்தாவது இடம்!

தற்போதைய சந்தை நிலவரப்படி ஃபேஸ்புக்கின் பெரிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வரிசையில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர். உலகில் மொத்தம் 135 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அதில் 86.2 கோடி பேர் தினமும் தங்கள் கணக்கைப் பார்வையிடுகிறார்கள்.

இன்றைய தேதியில் இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் என்ணிக்கை 112 மில்லியன். அதாவது, 11.20 கோடி பேர். இதில் 4.5 கோடி பேர் தங்கள் கணக்கை தினமும் பயன்படுத்துபவர்கள் அல்லது பார்வை ஈடுபவர்கள். இந்த 11.20 கோடி பேரில் 9.9 கோடி பேர் தங்கள் போன்கள் மூலம் ஃபேஸ்புக்கை இயக்குகிறார்கள்.

அதேபோல் இந்தியாவில் வாட்ஸ் அப்பின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 70 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதில் இந்தியா 10-வது இடத்தை பிடித்திருக்கிறது. வாட்ஸ் அப்பின் மொத்த பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 600 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் 41% தங்கள் புகைப்படங்களை பகிர்வதற்க்கும், 37% காமெடி வீடியோக்களைக் காண்பதற்கும், 32% விறுவிறுப்பான செய்திகளைப் படிப்பதற்கும், 24% பொதுவான உலாவலுக்கும் பயன்படுத்துவதாக ஃபேஸ்புக்கின் இந்திய நிர்வாக இயக்குநர் கீர்த்திகா ரெட்டி தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ