Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எண்ணெய் விலை குறைவால் இந்திய ரயில்வே லாபம்!

தற்போது டீசல் விலை குறைவு காரணமாக, மொத்த விலையில் 16% குறைந்து (மொத்த பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கிறது) இந்திய ரயில்வேக்கு கிடைக்கிறது. சமீபத்தில் 2014 ஜூன் மாதத்தில்தான் 16% பயணிகள் கட்டணமும், 6.5% சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை தோராயமாக 60.08 (ரயில்வேக்கு) ரூபாயாக இருந்தது. இப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை வெறும் 50.51 ரூபாய்தான் (ரயில்வேக்கு).

சரக்கு போக்குவரத்து இந்த நிதியாண்டில் ஏப்ரல் - நவம்பர் வரை 5.2% அதிகரித்து இருக்கிறது. அது மட்டுமின்றி இப்போது பயணிகள் கட்டணத்தையோ, சரக்கு கட்டணத்தையோ குறைக்க ரயில்வே நிர்வாகம் தயாராக இல்லை, இந்த நிலை எப்படியும் அடுத்த 2015 மார்ச் வரை நீடிக்கும் என்றும் ரயில்வே துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

இந்திய ரயில்வே ஓர் ஆண்டுக்கு மொத்தமாக 2.7 பில்லியன் லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது. ரயில்வேயின் மொத்த எரிபொருள் செலவில் 70% டீசலுக்குகே செலவாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வே இந்த நிதியாண்டில் மட்டும் தோராயமாக 5,000 கோடி ரூபாயை டீசல் விலை குறைவு மூலம் சேமிக்க முடியும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ