Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளுக்கு அபராதம்!

வங்கிகளில் பின்பற்றப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) மற்றும் பணச்சலவை தடுப்பு ஆகிய விதிகளை ஐசிஐசிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளும் மீறி இருந்ததால் ஐசிஐசிஐ வங்கிக்கு 50 லட்சமும், பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு 25 லட்சமும் ஆர்பிஐ அபராதம் விதித்திருக்கிறது.

இதே போன்ற பிரச்சனைகளை காரணம் காட்டி ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, எஸ் பி ஐ ஆகிய வங்கிகளையும் எச்சரித்திருக்கிறது. இதனால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC)யை சுய மதிப்பீடு செய்து மறு பரிசீலனை செய்து கொள்ளும் படியும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.

சட்டரீதியான அமைப்புகளின் பெயரில் ஒரு கற்பனையான (Fictitious) அதாவது, போலியான வங்கிக் கணக்குகளை சட்டப்படி சரியான ஆவணங்கள் கொடுத்து தொடங்கி, அதில் தங்களுக்குச் சொந்தமில்லாத காசோலைகளை பணமாக மாற்றவும், டிடி மற்றும் போஸ்டல் ஆர்டர்களை பணமாக மாற்றவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படி மொத்தம் ஐந்து வங்கிகளில் கணக்கைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தக் கணக்குகள் ஒரு மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ