Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரும்பு உற்பத்தி குறைவு, இறக்குமதி அதிகரிப்பு!

இன்றைய சந்தை நிலவரப்படி இந்த நிதியாண்டில் இந்தியா 10 மில்லியன் டன் இரும்புத் தாதுவை இறக்குமதி செய்யும். இது 2012-13 நிதியாண்டில் மூன்று மில்லியன் டன் இரும்புத் தாது இறக்குமதி செய்யப்பட்டதைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிக இறக்குமதியாகும்.

நிலையில்லாத இரும்புத் தாது உற்பத்தி, உள்நாட்டில் அதிக விலை பிரச்னை, வெளிநாடுகளில் குறைவான விலையில் கிடைக்கும் இரும்புத் தாது, வெளி நாடுகளில் கிடைக்கும் இரும்புத் தாதில் மாசு பொருட்களான சிலிகா, அலுமினியாஆகியவைகள் குறைந்த அளவில் இருப்பதும் இரும்பை இறக்குமதி செய்ய முக்கிய காரணங்களாகின்றன. இரும்பில் மாசு அதிகமாக இருக்கிறது என்றால், அதைப் பிரித்தெடுக்க கூடுதல் எரிபொருள் தேவை. எனவே, இரும்பின் மொத்த உற்பத்தி செலவு உயர்ந்துவிடும்.

அதுமட்டுமின்றி உள்நாட்டில் சுரங்க பிரச்னைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உற்பத்திக்குத் தேவையான இரும்புத் தாது ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் இரும்புத் தாதுவுக்கு 2,000 ரூபாய் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்து இரும்பு சுரங்கங்களிலும் உற்பத்தி குறைந்து வந்திருக்கின்றது என்பது கூடுதல் செய்தி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ