Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

700 மில்லியன் நிதி திரட்டியது ஃப்ளிப்கார்ட்

ஃப்ளிப்கார்ட் நிதி திரட்டுவது இந்த ஆண்டில் இது மூன்றாவது முறையாகும். இந்த நிறுவனம் 2014 மே மாதம் 1200 கோடி ரூபாயை திரட்டியது. அதன் பின் 2014 ஜீலை மாதம் 6000 கோடி ரூபாயை திரட்டியது. இப்போது 4200 கோடி ரூபாயை திரட்டி உள்ளது.
 
தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 11 பில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது. பெலி கிஃப்ஃபார்ட், க்ரீன் வோக்ஸ் கேப்பிட்டல், ஸ்டெட்வியூ கேப்பிட்டல், டி.ரொவெ ப்ரைஸ் அஸ்ஸோசியேட்ஸ், கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி ஆகிய நிறுவனங்கள் இதன் புதிய முதலீட்டாளர்களாக இருக்கின்றன.
 
இதன் மூலம் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ளவும், உலக தரம் வாய்ந்த டெக்னாலஜி நிறுவனத்தை நிறுவவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கவும் முடிவு செய்திருக்கிறது.
 
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 2007ல் தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்திற்கு 26 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர்.
 
தினமும் எட்டு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மேல் இவர்களின் வலைதளத்தை பார்வையிடுகிறார்கள். இந்த நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் தொடங்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ