Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விரைவில் சுங்க வரி ரத்து!

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விரைவில் சுங்க வரி ரத்து!
 

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை விரைவில் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
நாடு முழுவதும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக சுங்க வரியை வசூலிக்கும் நிறுவனங்களில் பல, தங்களுக்குரிய பகுதிகளில் சாலையை சரிவர பராமரிப்பதில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

இது தவிர, தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசிய சாலைகள் வழியாக வாகனங்களில் செல்வதற்குகூட பொதுமக்கள் சுங்க வரி செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதே நேரம் சுங்கச்சாவடிகளில் பெறப்படும் மொத்த வருவாயில் 14 சதவீதம் மட்டுமே மத்திய அரசுக்கு கிடைத்து வருகிறது. இது, அண்மையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் வரியை ரத்து செய்ய நிதின் கட்காரி தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. இதற்கான பரிந்துரை ஒன்றை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்து உள்ளது.

அதன்படி பஸ், தனியார் வாகனங்களான கார், ஜீப் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் சுங்கவரி அடியோடு ரத்து செய்யப்படும். இனி வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம், 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மத்திய அரசுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கூடுதலாக 1 ரூபாய் அதிகரிக்கவும், புதிய வாகனங்கள் வாங்கும்போது அதன் மீது கூடுதலாக 2 சதவீத வரிவிதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடிகளை பயன்படுத்திக்கொள்ள ஒரே கட்ட தொகையாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கவும் இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2014-2019 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு 32 ஆயிரத்து 609 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ