Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 195.33 புள்ளிகள் குறைந்து 27506.46 புள்ளிகளாக வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 57.0 புள்ளிகள் குறைந்து 8267.00 புள்ளிகளாக வர்த்தகமாயின.

10 கிராம் தங்கத்தின் விலை 27 ரூபாய் குறைந்து 26,581 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 41 ரூபாய் அதிகரித்து 3,575 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.28 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இந்தியச் சந்தைகள் இறக்கம் காணத் தொடங்கி சென்செக்ஸ் 0.71 சதவிகிதமும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.68 சதவிகிதமும் இறக்கம் கண்டிருக்கிறது.
 
உலக சந்தைகளில் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலும், ஆசிய சந்தைகளில் ஹேங்செங், கோஸ்பி, எஸ் இ டி காம்போஸைட், ஷாங்காய் காம்ம்போஸைட் ஆகிய சந்தைகள் இறக்கத்திலும் மற்ற சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் 3,034 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 1,036 பங்குகள் ஏற்றத்திலும், 1,901 பங்குகள் இறக்கத்திலும், 97 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
 
தேசிய பங்குச் சந்தையில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 35 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

என்டிபிசி  2.99%
பஜாஜ் ஆட்டோ  1.97%
பார்தி ஏர்டெல்  1.92%
சிப்லா  1.78%
அல்ட்ராடெக் சிமென்ட்  1.31%

இறக்கப் பங்குகள்


எஸ்எஸ்எல் டி - 3.23%
டாடா பவர்ஸ் - 3.21%
ஹெச் சி எல் டெக் - 3.12%
டாடா ஸ்டீல் - 2.36%
ஹெச்டிஎஃப் சி - 1.94%
 
1.30 மணி நிலவரம்
 
காலையில் ஏற்றத்தில் வர்த்தகமான இந்திய சந்தைகள் தற்போது சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 175.46 புள்ளிகள் சரிந்து 27526 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 8270 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 189 ரூபாய் குறைந்து 26,697 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 44 ரூபாய் அதிகரித்து 3,570 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.48 ரூபாயாக உள்ளது.
 
வங்கி, மூலதன் பொருட்கள், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பொருட்கள் ஏற்றத்திலும், மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பொருட்கள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஆசியப் பங்குச் சந்தைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகின்றன. கோஸ்பி, எஸ் இ டி காம்போஸைட், ஷாங்காய் காம்போஸைட் ஆகிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
11.00 மணி நிலவரம்
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 115.46 புள்ளிகள் உயர்ந்து 27815.25 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 30.20 புள்ளிகள் உயர்ந்து 8353.15 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து 26,620 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 44 ரூபாய் அதிகரித்து 3,578 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.35 ரூபாயாக உள்ளது.
 
வங்கி, மூலதன் பொருட்கள், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பொருட்கள் ஏற்றத்திலும், மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை சார்ந்த பொருட்கள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஆசியப் பங்குச் சந்தைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகின்றன. கோஸ்பி, எஸ் இ டி காம்போஸைட், ஷாங்காய் காம்போஸைட் ஆகிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
 
பார்தி ஏர்டெல் 1.95%
பேங்க் ஆஃப் பரோடா 1.89%
பஜாஜ் ஆட்டோ 1.74%
க்ராசிம் 1.57%
ஜிண்டால் ஸ்டீல் 1.34%
 
இறக்கப் பங்குகள்
 
ஹெச் சி எல் டெக் 2.00%
ஹிண்டால்கோ 1.73%
கோல் இந்தியா 1.45%
சேசா ஸ்டெர்லைட் 1.35%
கெயின் இந்தியா 1.27%

 

 ஏற்றத்தில் சென்செக்ஸ்,நிஃப்டி! காலை 9.30 மணி நிலவரம்

 
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. நம் இந்திய சந்தைகள் பழைய உச்சங்களான சென்செக்ஸின் 28,500 மற்றும் நிஃப்டியின் 8,500 ஆகிய புள்ளிகளை இன்னும் தொடமால் நிலையான ஏற்றத்திலியேயே நான்கு வர்த்தக நாட்களாக வர்த்தகமாகி வருகிறது.
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 104.12 புள்ளிகள் உயர்ந்து 27818.02 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 30.15 புள்ளிகள் உயர்ந்து 8354.15 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 390 ரூபாய் குறைந்து 26,608 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 82 ரூபாய் அதிகரித்து 3,534 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.26 ரூபாயாக உள்ளது..
 
மும்பை பங்குச் சந்தையில் 1,306 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 768 பங்குகள் ஏற்றத்திலும், 487 பங்குகள் இறக்கத்திலும், 51 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 31 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
 
பேங்க் ஆஃப் பரோடா 1.76%
பார்தி ஏர்டெல் 1.29%
ஆக்ஸிஸ் பேங்க் 1.07%
பஜாஜ் ஆட்டோ 1.00%
டாடா மோட்டார்ஸ் 0.97%
 
இறக்கப் பங்குகள்
 
கெயின் இந்தியா 1.85%
ஹிண்டால்கோ 0.96%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 0.88%
ஹெச் சி எல் டெக் 0.74%
கோல் இந்தியா 0.68%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ