Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆக்ராவில் புதிய ஸ்டோர் திறக்க வால்மார்ட் திட்டம்.

ஆக்ராவில்  புதிய ஸ்டோர் திறக்க  வால்மார்ட்  திட்டம்.

அமெரிக்காவின் முக்கிய பெரிய ரீடெய்ல் ஸ்டோரான வால்மார்ட் இந்தியாவில்  மேலும்  புதிய ஸ்டோர்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆக்ராவில்  ஸ்டோரை  2015ம் ஆண்டு மத்தியில் திறக்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம், கடைசியாக 2012 ஆம் வருடம் போபாலில் கடை திறந்தது. 

புதிய ஸ்டோர் திறப்பதற்கான அனைத்து அனுமதிகளையும் வாங்கி விட்டதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  

வால்மார்ட் ஏற்கனவே  20 ஸ்டோர்களை 9 மாநிலங்களில்  நடத்தி வருகிறது. அடுத்த 4 - 5 வருடங்களில் 50 மொத்த விலை ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில்  பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன்  6 வருடங்களுக்கான கூட்டு ஓப்பந்தத்தை போட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் சுதந்திரமாக செயல்பட முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close