Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களின் தொலைபேசி எண்ணை நீங்களே உருவாக்கலாம்!

டாடா டொகோமோ நிறுவனம் தொலைபேசி எண்களை வாடிக்கையாளர்களே உருவாக்கிக் கொள்ளும் வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களின் பிறந்த தேதி அல்லது அவர்களுக்கு பிடித்தமான எண்களை தங்களின் தொலைபேசி எண்ணாக உருவாக்கிக் கொள்ள முடியும். 

வாடிக்கையாளர்கள் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் எண்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை டாடா டொகோமோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது அதிக அளவிலான புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவை முதல் முறையாக வழங்குவது இந்த நிறுவனம்தான்.
மேலும் நிறுவனத்தின் ஆராய்ச்சிப்படி 75% வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட சேவைகளை விரும்புகிறார்கள். இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக  உள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ