Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவன சட்ட செட்டில்மென்ட் திட்டம் 2014

 நிறுவன சட்ட செட்டில்மென்ட் திட்டம் 2014

(company law settlement scheme  - CLSS 2014)
- நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்  
 
- கே. கணேசம்மாள், கம்பெனி செக்ரடரி, திருச்சி..
 
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக இருப்பவை ‘நிறுவனங்கள். நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் இயற்றப்பட்ட சட்டம் ‘நிறுவனங்கள் சட்டம் 1956 (companies Act 1956) ஆகும்.
 
இந்தச் சட்டம், காலத்தின் தேவைக்கேற்பவும், பொருளாதார மாற்றத்திற்கேற்பவும் பல்வேறு ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, 2013-ல் புதிய நிறுவனங்கள் சட்டம் 2013 (Companies Act 2013) இயற்றப்பட்டது.
 
நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட, ஓவ்வொரு நிறுவனமும், ஆண்டு  ஆவணங்கள (Annual Documents ) அதாவது லாப நஷ்ட கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பேடு மற்றும் ஆண்டு அறிக்கை (Balance sheet & profit and loss account, Annual return) போன்றவற்றை வருடா வருடம், நிறுவனப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
 
அவ்வாறு, நிறுவனத்தின் ஆண்டு ஆவணங்களை தாக்கல் செய்யத் தவறும் நிறுவனங்களுக்கும், நிறுவன இயக்குநர்களுக்கும்  (Directors) விதிக்கப்படும் அபராதத் தொகை மற்றும் தண்டனைகளின் அளவு, நிறுவனச்சட்டம் 1956 விட நிறுவனச்சட்டம் 2013-ல் உயர்த்தபட்டுள்ளது.
தோராயமாக இந்த ஆண்டு  ஜூன் மாத இறுதியில் மட்டும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 14.02 லட்சம் ஆகும்.  இதில் 9.74 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே, செயல்படும் நிலையில் (Active Status) உள்ளது.
 
 தொடர்ந்து, மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஆண்டு கணக்குகளையும், ஆண்டு அறிக்கையினையும், நிறுவனப் பதிவாளாpடம் தாக்கல் செய்யப்படாத நிறுவனங்கள் 1.42 லட்சமாக உள்ளது. இந்நிறுவனங்கள் ‘செயலிழந்த நிலை’(Dormant status) ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
நிறுவனங்கள், ஆண்டு ஆவணங்களை தாக்கல் செய்யாததால் ஏற்படும் விளைவுகள்:
 
                         - கே. கணேசம்மாள், கம்பெனி செகரக்டரி, திருச்சி
 
2. ஆண்டு ஆவணங்களை தாக்கல் செய்யப்படாத நிறுவனத்தின் இயக்குநர்,  இயக்குநராக இருக்க தகுதியிழந்தவராகக் (Disqualification of Directors) கருதப்படுகிறார்.
 
 3. நிறுவனத்தின் நிலையும் செயலிழந்த நிலைக்கு மாற்றப்படுவதால வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
 
இந்த நிலையில், நிறுவன விவகார அமைச்சகம் (MINISTRY OF CORPORATE  AFFAIRS) பல்வேறுப்பட்ட தரப்பின் பரிந்துரையினை ஏற்று, ஆண்டு ஆவணங்களை தாக்கல் செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு, ஒரு முறை வாய்ப்பு கொடுத்து, குறைந்த அபராதத் தொகையுடன் சாp செய்து கொள்வதற்காக ஆகஸ்ட் 12, 2014 ல் நிறுவனங்கள் சட்ட செட்டில்மென்ட் திட்டம் 2014ஐ அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் இரண்டு முறை நீடிக்கப்பட்டு, தற்போது 31.12.2014 வரைக்கும் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
 சிஎல்எஸ்எஸ்  2014 எந்தெந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்?
 
2014 ஜூன் 30 வரைக்கும்  ஆண்டு ஆவணங்களை  தாக்கல் செய்யப்படாத நிறுவனங்களுக்கு பொருந்தும்.
 
சிஎல்எஸ்எஸ்  2014 2014 என்னென்ன பயன்?
 
 1. நிறுவனம் செலுத்த வேண்டிய அபராதத் தொகையில் 75 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு லட்சம் முதலீடாக கொண்டுள்ள நிறுவனம் ஒன்று, ஆறு வருட காலமாக ஆண்டு ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று எடுத்துக்கொண்டால்,
 
ஒரு வருடத்திற்கு தாக்கல் செய்யும் போது செலுத்த
வேண்டிய தொகை                                                                                   600
    அபராதத் தொகை (12 முறை)                  7200
                                     ---------                     
                                                                                                                     7800
சிஎல்எஸ்எஸ் – 2014 ல் தாக்கல் செய்வதால்                        5400
75 சதவிகித அபாராதத் தொகையிலிருந்து விலக்கு
                                     ----------
இறுதியாக செலுத்த வேண்டிய தொகை              2400
                                     ---------
 
ஆறு வருடத்தின் அபாரதத் தொகை விலக்கு(5400 *6)         32,400
 
உண்மையிலேயே, சிஎல்எஸ்எஸ் -2014  நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். அனைத்து ஆவணங்களையும் இந்த சிஎல்எஸ்எஸ் - 2014 திட்டத்தில் தாக்கல் செய்து விட்டு சட்ட விலக்களிப்பு சான்றிதழ் (Immunity certificate) ஐ நிறுவனப் பதிவாளாpடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். 
 
 2. இயக்குநர்களின் தகுதியின்மை (Disqualified Director) என்ற நிலையில் இருந்து இயக்குநர்கள்  விடுபட்டுக் கொள்ளலாம்.
 
 3. நிறுவனத்தின் மீது, வழக்கு தொடர்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 
 
 4. நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் செயல்படாத நிலையிலும், தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்ற நிலையிலும் இருக்கும்  நிறுவனங்கள், விரைவு வழியில் வெளியேறுதல் (Fast Track Exit) மூலம் 25 சதவிகிதம் தொகை மட்டுமே செலுத்தி நிறுவனப் பதிவேட்டிலிருந்து பெயரை நீக்கிக் கொள்ளலாம்.
 
 5. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் தொடங்க காலதாமதம் ஆகும் நிறுவனங்கள், தாமாகவே,  ‘செயல்படாத நிலை’(Dormant  Status) -க்கு விண்ணப்பித்து  25 சதவிகிதம் தொகை மட்டும் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். பின்னாளில், வியாபார நடவடிக்கைகள் தொடங்கப்படும் பொழுது செயல்படும் நிலை (Active Status)-க்கு விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
 
நிறுவனச்சட்டம் 2013 மூலமாக 270 நாட்களுக்கு மேல், தாமதமாகும் எந்த ஆவணங்களையும், நேரடியாக தாக்கல் செய்ய முடியாது. நிறுவனப் பதிவாளர் மூலமாகவோ (Registrar of Companies) அல்லது நிறுவனச்சட்ட வாhpயம் மூலம்  (Company Law Board) தான் தாக்கல் செய்ய முடியும்.
 
 இறுதியாக, இந்த சிஎல்எஸ்எஸ் -2014ஐ பயன்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து தவறுகை செய்யும் நிறுவனங்களின் மீது நிறுவனச்சட்டம் 1956 மற்றும் நிறுவனச்சட்டம் 2013 மூலமாக நிறுவனப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க நோpடலாம்.
 
ஆகவே நிறுவனங்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ