Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய 100,500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு காலக்கெடு! ஜூன் வரை நீட்டிப்பு

 பழைய ரூபாய் நோட்டு காலக்கெடு 

ஜூன் வரை நீட்டிப்பு

2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 10,20,50,100,500,1000 ரூபாய் நோட்டுக்கள் ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது என கடந்த மார்ச் 2014ல் ஆர்பிஐ அறிவித்திருந்தது . அதற்கு இணையான ரூபாய் நோட்டுகளை ஜனவரி 1,2015க்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவை ஜூன் 30,2015ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சீரிஸ் ரூபாய் நோட்டுக்கள் பல வருடங்களாக புழக்கத்தில் உள்ளன. இவற்ரின் பின் பக்கத்தின் கீழ் பகுதியில் 2005 என குறிப்பிட்டுள்ள அதற்கு முந்தைய வருட நோட்டுக்களை திரும்ப பெற அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை அறிவித்த மார்ச் 2014ல் இருந்து இதுவரை 52855 கோடி ரூபாய் மதிப்புள்ள 144.66 கோடி நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு வாரியாக மாற்றப்பட்ட விவரம் பின்வருமாறு,

ரூபாய் நோட்டு எண்ணிக்கை மதிப்பு (ரூ)

100               73.2 கோடி 7320 கோடி
500               51.85 கோடி 25925 கோடி
1000       19.61 கோடி 19610 கோடி

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ