Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப்பில் வாய்ஸ்கால் வசதி... வெளியான ஸ்கிரீன்ஷாட் உண்மையா?

 வாட்ஸ்அப்பில் வாய்ஸ்கால் வசதி...

வெளியான ஸ்கிரீன்ஷாட் உண்மையா?

உடனடி தகவல் ஆப்ஸில் அதிகமான வரவேற்பை பெற்ற வாட்ஸ் அப் நிறுவனம் 2015ம் ஆண்டுக்குள் வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.
 
அதற்கான ஆரய்ச்சிகளிலும் சோதனைகளிலும் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தவுள்ள வாய்ஸ்காலுக்கான முகப்பு, அந்த வசதி திரையில் தோன்றும் விதம் ஆகியவை ஸ்கிரீன்ஷாட்டுகளாக வெளியாகியுள்ளன.
 
இவை உண்மையில் வாட்ஸ்அப் நிறுவனத்துடையது தானா? இதில் இருப்பது போல் தான் வாட்ஸ் அப் இருக்குமா? என்ற கேள்விகளுக்கு இணையதளத்தில் வெளியாகியுள்ள வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்களில் பதில் தரப்பட்டுள்ளது.
 
இது சாதாரணமாக உள்ள சாட் ஸ்கிரினீல் அல்லாமல் தனியாக டையலர் அமைப்புடன் இருக்கும் என்றும். அந்த இடத்திலியே ஒருவருக்கு வந்த மற்றும் ஒருவர் செய்த வாய்ஸ் காலின் விவரம் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதே வசதியை வைபர், லைன் போன்றவை வைத்திருந்தாலும் வாட்ஸ் அப் அதில் உள்ள குறைகளை கலைந்து வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வாட்ஸ்அப், வாய்ஸ் காலுக்கான வேலைகள் நடந்துவருகின்றன. தொழில்நுட்ப சிக்கல்களை கலைந்து வருவதால் 2015ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வசதி சந்தைக்கு வரும் என்று வாட்ஸ் அப் கூறியுள்ளது. ஆனால் இந்த ஸ்கிரீன் ஷாட் குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ