Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

 உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு


2013 நவம்பரில் 51.37 லட்சமாக இருந்த உள்நாட்டு விமானப்  பயணிகளின் எண்ணிக்கை, 2014 ஆண்டு நவம்பரில் 58.74 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது 14.35% உயர்வு.

2014 ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில், இந்திய விமானத் துறை 19.4% வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்த காலத்தில் இந்தியாவிற்குள் பயணம் செய்த விமான பயணிகளின் எண்ணிக்கை 6.09 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2013 ஏப்ரல்-நவம்பர் காலத்தில் இந்தியாவிற்குள் பயணம் செய்த விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 5.58 கோடியாக இருந்தது.

நவம்பர் மாதத்தில் மட்டும் இண்டிகோ நிறுவனம் 19.60 லட்ச பயணிகளை பயணிக்கச் செய்து முதலிடத்தில் உள்ளது. 10.81 லட்ச பயணிகளை பயணிக்கச் செய்து ஜெட் ஏர்வேஸ் இரண்டாவது இடத்திலும், 10.27 லட்ச பயணிகளை பயணிக்கச் செய்து ஏர் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP