Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஷ்யாவிற்கு பால் ஏற்றுமதி: அமுல் திட்டம்

ரஷ்யாவிற்கு பால் ஏற்றுமதி: அமுல் திட்டம்
 
தற்போது அமூல் நிறுவனம் ரஷ்யாவின் கெலக்டிகா குழுவுடன் பால் மற்றும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாக கூறியுள்ளது. "இந்த மாத ஆரம்பத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த கெலக்டிகா நிறுவனத்தின் குழு எங்கள் உற்பத்தி ஆலைகளை சோதனை செய்தது.
 
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அப்படி ஒப்ப்ந்தங்கள் நிறைவேறினால் ரஷ்யாவிற்கு அமுல் நிறுவனம் பால்,பால் பவுடர், பாலாடைகள் போன்றவைகளை ஏற்றுமதி அமுல் நிறுவனம் செய்யும்" என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ் சோதி தெரிவித்தார்.
 
அதே போல் சர்வதேச பால் விலை தற்போது இந்தியாவிற்கு சாதகமாக இல்லை, இப்போது ஏற்றுமதி செய்தால் இந்திய பால் நிறுவனங்களுக்கு லாபகரமாக இருக்காது என்பதையும் தெரிவித்தார். இந்த பால விலையை பற்றியும் பேசப்படும் என்று சோதி தெரிவித்தார், தற்போது அமூல் நிறுவனம் கிட்டத்தட்ட 20 நாடுகளுக்கு தன் பால் மற்றும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கெலக்டிகா நிறுவனம் ரஷ்யாவின் மொத்த பால் தேவையில் மூன்று சதவிகிதத்தை மட்டும் தான் பூர்த்தி செய்கிறது.மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் அளவு 2014ன் முதல் காலாண்டில் 10.4 சதவிகிதம் அதிகரித்து 1,423 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பால் பற்றாக்குறை இருப்பதும், இறக்குமதி மூலம் விலை குறைவாக பால் கிடைப்பதற்காகவும் இறக்குமதியை அதிகரிக்கிறது.
 
இந்தியா ரஷ்யாவிற்கு கடந்த நிதி ஆண்டில் 2.15 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.  ஆனால் ரஷ்யாவின் மொத்த இறக்குமதி 318 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் 40 பில்லியன் டாலர்களுக்கு உணவு பொருட்களுக்காக மட்டும் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா ரஷ்யாவிற்கு 400 மில்லியன் டாலர்களுக்கு பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்று கூறப்படுகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ