Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பில்லியன் டே விற்பனையில் ஃப்ளிப்கார்ட் சொதப்பல்: அமேஸான், ஸ்நாப்டீல் தனி ஆவர்த்தனம்.

 பிக் பில்லியன் டே விற்பனையில் ஃப்ளிப்கார்ட் சொதப்பல்:

அமேஸான், ஸ்நாப்டீல் தனி ஆவர்த்தனம்.


பிக் பில்லியன் டே விற்பனையில் அமேஸான் மற்றும் ஸ்நாப்டீல் ஆஹா, ஃப்ளிப்கார்ட் ஸ்வாஹா, கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டே விற்பனை விளப்பரத்திற்கு பல கோடி ரூபாயை செலவு செய்தது. அந்த விளப்பரங்களை ஸ்நாப்டீல் மற்றும் அமேஸான் நிறுவனங்கள் அமைதியாக பயன்படுத்திக் கொண்டது.

ஃப்ளிப்கார்டின் சொதப்பலான அதிக விலை, ஆஃபர் தொடங்கிய சில மணி நேரங்களில் எந்த பொருளை வாங்க முயன்றாலும் அவுட் ஆஃப் ஸ்டாக் போன்ற பிரச்னைகள் வாடிக்கையாளர்களை மற்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் பக்கம் மிக எளிதாக திசை திருப்பிவிட்டது.
 
இதன் போட்டி நிறுவனங்களான அமேஸானும், ஸ்நாப்டீலும் விவரமாக தள்ளுபடி விலை, அவுட் ஆஃப் ஸ்டாக் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தாமல் வசூலை அள்ளின. 

இத்தனைக்கும் இந்தியாவின் பெரிய விழா கொண்டாட்டமான தீபாவளி அக்டோபர் மாதம் 23ஆம் தேதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்நாப்டீல் நிறுவனம் சமூக வலைதளங்களிலும், வாடிக்கையாளர்களையும் சிறப்பான விற்பனை சேவைகளை செய்து நல்ல பெயரை எடுத்துக் கொண்டது.
 
அக்டோபர் ஆறாம் தேதி ஸ்நாப்டீல் நிறுவனத்தின் வலைதளத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 15 மடங்கு அதிகரித்திருந்தது. சுருக்கமாக ஸ்நாப்டீல் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்து இந்த போட்டியான வர்த்தக சூழ்நிலையில் தன்னை நிலை நாட்டிக் கொண்டது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ