Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு வங்கிகளின் வாராக் கடன் இரு மடங்கு அதிகரிப்பு

 அரசு வங்கிகளின் வாராக் கடன் இரு மடங்கு அதிகரிப்பு

 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் தள்ளுபடி கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
 
வங்கிகளின் வாராக் கடன் அளவு
ஆண்டு        ரூபாய் (கோடியில்)
2011-12          20,752
2012-13          32,992
2013-14          42,447
 
வணிக வங்கிகளின் கடன் தள்ளுபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 1.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஜி.டி.பியில் 1.3 சதவிகிதமாகும். 
 
இந்திய வங்கிகளின் வாராக் கடன்களாக 2013-2014 ஆம் ஆண்டு ரூபாய் 2.40 லட்சம் கோடியாக இருந்தது. இதில் 2.16 லட்சம் கோடி ரூபாய் (90%) மேல் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ