Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்தியச் சந்தைகள்!

 

ஏற்றத்தில் முடிந்த இந்தியச் சந்தைகள்!

3.30மணி நிலவரம்!


மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 33.17 புள்ளிகள் உயர்ந்து 27241.78 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 26.60 புள்ளிகள் அதிகரித்து 8200.70 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 255 ரூபாய் அதிகரித்து 26,839 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 63 ரூபாய் அதிகரித்து 3,613 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.60 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

இந்தியச் சந்தைகள் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று ஏற்றத்தில் முடிந்தது. சென்செக்ஸ் 0.12 சதவிகிதமும், நிஃப்டி 0.33 சதவிகிதமும் அதிகரித்து வர்த்தகமாயின.

இந்தியச் சந்தையில் கன்ஸ்யூமர் டியூரபுள்ஸ், ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும், ஐ.டி, மிட் கேப், மெட்டல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாயின. எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி மட்டும் 0.21 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தையில் 2,951 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,411 பங்குகள் ஏற்றத்திலும், 1,423 பங்குகள் இறக்கத்திலும், 117 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 31 பங்குகள் ஏற்றத்திலும், 19 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள் :
டி.எல்.எஃப் - 3.46
ஜிண்டால் ஸ்டீல் - 2.16
டெக் மஹிந்திரா - 1.95
ஹெச் சி எல் டெக் - 1.62
ஹெச்.டி.எஃப்.சி - 1.48

இறக்கப் பங்குகள்
பி ஹெச் இ எல் - 1.18%
மாருதி சுசுகி - 0.96%
ஜீ என்டர்டெயின்மென்ட் - 0.96%
ஐ டி சி - 0.93%

ஹெச் யூ எல் - 0.88%

2.00மணி நிலவரம்
 
 

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 42.02 புள்ளிகள் குறைந்து 27166.59 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.40 புள்ளிகள் அதிகரித்து 8174.50 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. 

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 288 ரூபாய் அதிகரித்து 26,872 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 56 ரூபாய் அதிகரித்து 3,606 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.64 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

மொத்த ஆசிய பங்குச் சந்தைகளும் தேக்கத்தில் வர்த்தகமாகின்றன. எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி மட்டும் 0.61 சதவிகிதம் குறைந்து இறக்கத்தில் வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. சென்செக்ஸ் 0.21 சதவிகித இறக்கத்திலும் , நிஃப்டி 0.05 சதவிகித இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. 

மும்பை பங்குச் சந்தையில் 2,699 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,213 பங்குகள் ஏற்றத்திலும், 1,366 பங்குகள் இறக்கத்திலும், 120 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
டி.எல்.எஃப் - 2.58
ஜிண்டால் ஸ்டீல் - 2.22
ஹெச் சி எல் டெக் - 1.59
டெக் மஹிந்திரா - 1.16
இன்ஃபோசிஸ் - 1.12

இறக்கப் பங்குகள்
ஐ டி சி - 1.21%
ஜீ என்டர்டெயின்மென்ட் - 1.08%
ஐசிஐசிஐ பேங்க் - 1.06%
என் எம் டி சி - 0.97%
அம்புஜா சிமென்ட்ஸ் - 0.93

 

12.30 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 6.18 புள்ளிகள் குறைந்து 27202.43 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 8.55 புள்ளிகள் அதிகரித்து 8182.65 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 0.02 சதவிகித இறக்கத்திலும் , நிஃப்டி 0.10 சதவிகித ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 209 ரூபாய் அதிகரித்து 26,793 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 41 ரூபாய் அதிகரித்து 3,591 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.64 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தையில் ஸ்ட்ரைட் டைம்ஸ், எஸ்.இ.டி காம்போசைட், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி ஆகிய பங்குச் சந்தைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகின்றன. 
மும்பை பங்குச் சந்தையில் 2,523 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,225 பங்குகள் ஏற்றத்திலும், 1,177 பங்குகள் இறக்கத்திலும், 121 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும், இரண்டு பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
பி என் பி - 1.36%
பவர் க்ரிட் கார்ப் - 1.14%
பேங்க் ஆஃப் பரோடா - 1.14%
டி.எல்.எஃப் - 1.10
ஹெச்.டி.எஃப்.சி - 0.99%

இறக்கப் பங்குகள்
ஐ டி சி - 1.06%
ஹெச் யூ எல் - 1.06%
எம் அண்ட் எம் - 1.06%
என் எம் டி சி - 0.86%
க்ராசிம் - 0.80%

11.00 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 30.24 புள்ளிகள் குறைந்து 27178.37 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1.95 புள்ளிகள் அதிகரித்து 8176.55 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 0.01 சதவிகித இறக்கத்திலும் , நிஃப்டி 0.08 சதவிகித ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன.

தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 209 ரூபாய் அதிகரித்து 26,793 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 41 ரூபாய் அதிகரித்து 3,591 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.64 ரூபாயாக உள்ளது.


மூலதன பொருட்கள், வங்கி, சி.என்.எக்ஸ் மிட் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. எஃப்.எம்.சி.ஜி, எண்ணெய் மற்றும் காஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் 2,171 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,150 பங்குகள் ஏற்றத்திலும், 931 பங்குகள் இறக்கத்திலும், 90 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
பவர் க்ரிட் கார்ப் - 2.13%
பி என் பி - 1.18%
பேங்க் ஆஃப் பரோடா - 1.07%
எஸ் பி ஐ - 0.95%
சன் பார்மா - 0.87%

இறக்கப் பங்குகள்
என் எம் டி சி - 0.66%
ஹெச் யூ எல் - 0.44%
பிபிசிஎல் - 0.84%
ஐ டி சி - 0.73
ஜீ என்டர்டெயின்மென்ட் - 0.66
இண்டஸ் இந்த் பேங்க் - 0.46%
டி எல் எஃப் - 0.38%
 

 
 9.30 மணி நிலவரம்
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 91.69 புள்ளிகள் அதிகரித்து 27300.30 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 34.45 புள்ளிகள் அதிகரித்து 8208.55 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 41 ரூபாய் குறைந்து 26,584 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 59 ரூபாய் குறைந்து 3,550 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.53 ரூபாயாக உள்ளது.
 
கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் இறக்கத்தில் வர்த்தகமான இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 0.45 சதவிகிதமும், நிஃப்டி 0.51 சதவிகிதமும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க டாலரின் மதிப்பு வளர்ச்சி கண்டு வருகிறது. ஆசிய பங்குச் சந்திகளில் நிக்கி, ஸ்ட்ரைட் டைம்ஸ், எஸ்.இ.டி காம்போஸைட் ஆகிய சந்தைகள் மட்டும் தேக்க நிலையில் வர்த்தகமாகின்றன. 
 
மும்பை பங்குச் சந்தையில் 1,108 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 802 பங்குகள் ஏற்றத்திலும், 282 பங்குகள் இறக்கத்திலும், 24 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. தேசிய பங்குச் சந்தையில் 41 பங்குகள் ஏற்றத்திலும், ஒன்பது பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
 
ஏற்றப் பங்குகள் :
பவர் க்ரிட் கார்ப்           - 2.13%
ஆக்ஸிஸ் பேங்க்        - 0.98%
எஸ் பி ஐ                          - 0.95%
இன்ஃபோசிஸ்               - 0.93%
லார்சன்                            - 0.81%
 
இறக்கப் பங்குகள்
பிபிசிஎல்                            - 0.84%
என் எம் டி சி                      - 0.66%
இண்டஸ் இந்த் பேங்க் - 0.46%
ஹெச் யூ எல்                    - 0.44%
டி எல் எஃப்                         - 0.38%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ