Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுத் துறை நிறுவனங்களில் சும்மா தூங்கும் ரூ. லட்சம் கோடி

 பொதுத் துறை நிறுவனங்களில் சும்மா தூங்கும் ரூ. 2 லட்சம் கோடி


2014 மார்ச் மாத முடிவில், மத்திய அரசின் 54 பொதுத் துறை நிறுவனங்களின் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு இணையாக ரூ.2 லட்சம் கோடி முதலீடு எதுவும் செய்யப்படாமல் சும்மா கிடக்கிறது. இந்தத் தொகை வங்கிகளில் டெபாசிட்களாக குறைந்த அளவு வட்டி வருமானத்தை தந்துக் கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் மொத்த ஒருங்கிணைந்த மூலதன செலவு 13.7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 
 
பொதுத் துறை நிறுவனங்களிடம் இருக்கும் கையிருப்பு தொகை மதிப்பு
 
நிறுவனம்                     கையிருப்பு மதிப்பு  (கோடியில்)
கோல் இந்தியா            54,780 
ஓ.என்.ஜி.சி                    24,480 
என்.எம்.டி.சி                  18,657 
என்.டி.பி.சி, பி               17,050 
பிஹெச்.இ.எல்            12,020

மேற்கூறிய நிறுவனங்களிடம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படாத தொகை இருக்கின்றன.

2008-09 நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 33.1 சதவிகிதம் டிவிடெண்ட்களாக வழங்கின. இது 2013 - 2014 நிதி ஆண்டில் 45.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ