Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேட்ஜெட் பார்வை! செல்ஃபி செல்போன் ஆக்ஸஸ் ஒன்

 கேட்ஜெட் பார்வை! செல்ஃபி செல்போன் ஆக்ஸஸ் ஒன்

 
மார்க்கெட்டில் எப்போதுமே வித்தியாசமான ஒரு பொருளுக்கு அதிகம் வரவேற்பு இருக்கும்.அதிலுள்ல விஷயங்கள் தனித்துவமாக இருக்கும் போது அதற்கான மதிப்பு என்பது சற்று அதிகமாகவே இருக்கும்.அதுவும் அந்த பொருள் ஒரு கேட்ஜெட் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. இளைஞர்கள் மத்தியில் கேட்ஜெட்களுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் பல புதுமைகளுடன் களமிறங்கியுள்ளது ஆக்ஸஸ் ஒன்.
 
முதன் முதலில் 13  மெகா பிக்‌ஷல் செல்ஃபி கேமிராவுடன் வெளிவந்த சோனி சென்சார் மொபைல் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் போட்டியாக வெளிவந்துள்ளது ஐ பெர்ரி ஆக்ஸஸ் ஒன் மொபைல். இதில் 15.5 மெகா பிக்சல் கேமிரா உள்ளது. இதில் என்ன சிறப்பு என்றால் அந்த கேமராவையே முன் மற்ரும் பின் பக்க கேமராவாக திருப்பி கொள்ளலாம். அது சுழலும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே முன்புற செல்ஃபி கேமிராவும் 15.5 மெகா பிக்‌ஷல் வசதி கொண்டதாக உள்ளது. இது செல்ஃபி பிரியர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.
 
மேலும் இந்த செல்போன் 15990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் தளங்களிலும் இந்த செல்போன் விஒற்பனைக்கு உள்ளது.
 
 
இதன் சிறப்பம்சங்கள்:
 
2 ஜிபி RAM - இதனால் போன் ஹேங் ஆகும் வாய்ப்பு மிகவும் குறைவு
 
5.7 இன்ச் டிஸ்ப்ளே - 16000000 கலர்களை சப்போர்ட் செய்யும் எனவே நல்ல தெளிவான டிஸ்ப்ளேவாக இருக்கும்
 
3200 mAh பேட்டரி திறன் கொண்ட இன்பிள்ட் பேட்டரி
 
1.7 GHz ஆக்டா கோர் பிராஸசர்
 
இரண்டு சிம் கார்டு வசதி கொண்டது - ஒன்றில் மட்டும் 3ஜி வசதியை பயன்படுத்தலாம்.
 
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்.
 
மெமரி 32 ஜிபி இன்டர்னல் மெமரி.128 ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியாக பயன்படுத்திகொள்ளலாம்.
 
15.5 கேமிரா . ஆட்டோ ஃபோக்கஸ் வசதியுடன். 207 டிகிரி வரை திருப்பிக்கொள்ளளாம்
 
போனின் மொத்த எடை 175 கிராம்.
 
இந்த செல்போனில் கூடுதலாக ரியர் டச் பேனல் உள்ளது. இந்த வசதியின் மூலம் ஸ்கிரீனை scroll செய்வதும் Navigate செய்யவும் சுலபமாக இருக்கும். 
 
 
ப்ளஸ்:
 
+ ட்வில்லிங் கேமரா (முன், பின் சுழலக்கூடிய கேமரா)
+ ரியர் டச் பேனல்
 
மைனஸ்:
 
- பேட்டரி
- அளவு
 
செ. தினேஷ்குமார்(மாணவ பத்திரிக்கையாளர்)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ