Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்தியச் சந்தைகள்

3.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் முடிந்த இந்தியச் சந்தைகள்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 153.95 புள்ளிகள் உயர்ந்து 27395.73 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 45.60 புள்ளிகள் உயர்ந்து 8246.30 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 86 ரூபாய் குறைந்து 26,987 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ஆறு ரூபாய் அதிகரித்து 3,541 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.67 ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஆசிய பங்குச் சந்தைகளில் நிக்கி, கோஸ்பி, எஸிடி காம்போசைட் ஆகிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின, மற்ற சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐரோப்பிய சந்தைகளில் எஃப்டிஎஸ்இ மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் 3,024 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 1,609 பங்குகள் ஏற்றத்திலும், 1,302 பங்குகள் இறக்கத்திலும், 113 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 36 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

விலை ஏற்றப் பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ் 4.20%
சேசா ஸ்டெர்லைட் 3.76%
ஜிண்டால் ஸ்டீல் 3.35%
ஹிண்டால்கோ 3.32%
கோல் இந்தியா 2.26%

விலை இறக்கப் பங்குகள் :

பிஎன்பி 1.24%
கெய்ர்ன் இந்தியா 1.10%
பார்தி ஏர்டெல் 0.87%
கோட்டக் மஹிந்திரா 0.76%

 

 

ஏற்றத்தில் இந்தியச் சந்தைகள்

3 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 181.04 புள்ளிகள் உயர்ந்து 27422.82 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 54.45 புள்ளிகள் உயர்ந்து 8255.15 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தற்போது இந்திய சந்தைகளின் வளர்ச்சி சதவிகிதம் 0.66 ஆக இருக்கிறது. இன்றைய வர்த்தகம் ஏற்றத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 63 ரூபாய் குறைந்து 27,010 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ரூபாய் ஒன்று அதிகரித்து 3,548 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.68 ரூபாயாக வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் 2,837 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,680 பங்குகள் ஏற்றத்திலும், 1,039 பங்குகள் இறக்கத்திலும், 118 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 45 பங்குகள் ஏற்றத்திலும், ஐந்து பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

சேசா ஸ்டெர்லைட் 3.86%

ஏசியன் பெயிண்ட்ஸ் 3.78%

ஹிண்டால்கோ  3.36%

ஜிண்டால் ஸ்டீல் 2.55%

கோல் இந்தியா 2.50%

இறக்கப் பங்குகள் :

பிஎன்பி: 1.01%

என்எம்டிசி: 0.93%

கோட்டக் மஹிந்திரா : 0.53%

கெய்ர்ன் இந்தியா : 0.56%

 

12.30 மணி நிலவரம்!

12.30 மணி நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 236.55 புள்ளிகள் உயர்ந்து 27478.33 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70.15 புள்ளிகள் உயர்ந்து 8270.85 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அதே சமயம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.65 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை 28 ரூபாய் குறைந்து 27,045 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,554 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. பிஎஸி ஆட்டோ, ஹெல்த்கேர், ஐடி, மெட்டல், ஆயில் அண்டு கேஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றப் பங்குகள்:
சேஷா ஸ்டெர்லைட்           216.40    4.29
ஜிண்டால் ஸ்டீல்                 154.85    3.72
ஹிண்டால்கோ                     157.10    3.36
டிஎல்எஃப்                                 140.10    2.86
டாடா ஸ்டீல்                          409.65    2.86


இறக்கப் பங்குகள்:
பிஎன்பி                               221.50       -0.34
கோட்டக் மஹிந்த்ரா    1,248.95   -0.33
கெய்ர்ன் இந்தியா            241.70        -0.06
 

11.00 மணி நிலவரம்:

உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்ததை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 225 புள்ளிகள் அதிகரித்து 27467க்கும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து 8266-க்கும் வர்த்தகமாகி வருகின்றன. 

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கேர் தரக்குறியீடு நிறுவனம், அபான் ஆஃப்சோர் நிறுவனத்தின் தரக் குறியீட்டை அதிகரித்துள்ளது. இதனால் அபான் ஆஃப்சோர் பங்கின் விலை 13% அதிகரித்துள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ