Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த நிஃப்டி, சென்செக்ஸ்

3.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் நிறைவடைந்த நிஃப்டி, சென்செக்ஸ்
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 7.81 புள்ளிகள் அதிகரித்து 27403.54 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1.95 புள்ளிகள் அதிகரித்து 8248.25 என்ற அளவிலும் வர்த்தகமாயின.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 26,784 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 9 ரூபாய் சரிந்து 3,405 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.47 ரூபாயாக உள்ளது.
 
ஆட்டோமொபைல், மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. வங்கி, மூலதன பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
 
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,995 பங்குகள் வர்த்தகமாயின, அதில் 1,444 பங்குகள் ஏற்றத்திலும், 1,415 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
 
உலக சந்தைகளில் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாயின. ஆசியாவில் ஜகார்தா காம்போஸைட், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி ஆகிய சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் ஏற்ற சதவிகிதம் வெறும் 0.02 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்றப் பங்குகள் :
பிஹெச்இஎல் 1.77%
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 1.52%
பேங்க் ஆஃப் பரோடா 1.46%
என்டிபிசி 1.43%
இண்டஸ்இன்ட் 1.32%
 
இறக்கப் பங்குகள் :
ஹீரோ மோட்டோ கார்ப் -1.90%
டாடா ஸ்டீல் -1.88%
கெர்யின் இந்தியா -1.78%
ஜிண்டால் ஸ்டீல் -1.75%

ரிலையன்ஸ் -1.67%

 

இறக்கத்தில் இந்திய சந்தைகள்

மதியம் 2:30 மணி நிலவரம்:
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 40  புள்ளிகள் சரிந்து 27355 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து  8237 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 51 ரூபாய் அதிகரித்து 26,815 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு  28  ரூபாய் சரிந்து 3,386 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.50 ரூபாயாக உள்ளது.
 
அரசு நில கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்திற்கு அனுமதி வழங்கி இருப்பதால் பவர் மற்றும் வீட்டு வசதி துறை பங்குகள் அதிகரித்து வர்த்தகமாகின்றன.பிரென்ட் மற்றும் நைமேக்ஸ் கச்சா எண்ணெய் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை தொட்டு வர்த்தகமாகின்றன. உலக அளவில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது சர்வதேச சந்தைகளின் மாற்றத்துக்கு காரணமாகியுள்ளது
 
 
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1320 பங்குகள் விலை அதிகரித்தும், 1344 பங்குகள் விலை குரைந்தும் வர்த்தகமாகின.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
டாக்டர் ரெட்டி லேப் 1.30
பிஹச்இஎல் 1.28
பாங்க் ஆஃப் பரோடா 1.11
என்எம்டிசி 1.01
என்பிடிசி 0.93
 
விலை குறைந்த பங்குகள்:
 
ஜின்டால் ஸ்டீல் -2.17
டாடா ஸ்டீல் -1.98
கெய்ர்ன் இந்தியா -1.96
ரிலையன்ஸ் -1.95
ஹீரோ மோட்டோ கார்ப் -1.86
 
 
காலை 11:30 மணி நிலவரம்:
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 4  புள்ளிகள் சரிந்து 27391 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி மாற்றமின்றி 8246 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 126 ரூபாய் அதிகரித்து 26,890 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு  6 ரூபாய் அதிகரித்து 3,420 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.76 ரூபாயாக உள்ளது.
 
அரசு நில கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்திற்கு அனுமதி வழங்கி இருப்பதால் பவர் மற்றும் வீட்டு வசதி துறை பங்குகள் அதிகரித்து வர்த்தகமாகின்றன.பிரென்ட் மற்றும் நைமேக்ஸ் கச்சா எண்ணெய் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை தொட்டு வர்த்தகமாகின்றன. உலக அளவில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது சர்வதேச சந்தைகளின் மாற்றத்துக்கு காரணமாகியுள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
டெக் மஹிந்த்ரா 1.41
பிஹச்இஎல் 1.38
லார்சன் 1.02
பிபிசிஎல் 0.87
டாக்டர் ரெட்டிலேப் 0.83
 
விலை குறைந்த பங்குகள்:
 
ரிலையன்ஸ் -1.60
செஸா ஸ்டெர்லைட் -1.53
கெய்ர்ன் இந்தியா -1.36
டாடா ஸ்டீல் -1.09

ஓஎன்ஜிசி -0.97

 

 9.30 மணி நிலவரம்!

 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி 9 புள்ளிகள் சரிந்து  27386 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1 புள்ளி அதிகரித்து 8246 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 309 ரூபாய் குறைந்து 26,764 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு  133 ரூபாய் குறைந்து 3,414 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.76 ரூபாயாக உள்ளது.
 
பிரென்ட் மற்றும் நைமேக்ஸ் கச்சா எண்ணெய் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை தொட்டு வர்த்தகமாகின்றன. உலக அளவில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது சர்வதேச சந்தைகளின் மாற்றத்துக்கு காரணமாகியுள்ளது
 
மும்பை பங்குச் சந்தையில் 555 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 412 பங்குகள் ஏற்றத்திலும், 125 பங்குகள் இறக்கத்திலும், 18 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. 
 
விலை அதிகரித்த பங்குகள்:(%)
 
 
டிஎல்எஃப் 1.18
பிபிசிஎல் 1.07
லார்சன் 1.04
பவர் கிரிட் கார்ப் 0.95
ஜி என்டர்டெயின்மெண்ட் 0.66
 
விலை குறைந்த பங்குகள்:(%)
 
செஸா ஸ்டெர்லைட் -1.39
ரிலையன்ஸ் -1.27
ஓஎன்ஜிசி -1.05
பிஎன்பி -1.03
பாங்க் ஆஃப் பரோடா -0.83
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ