Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருடத்தின் கடைசி வர்த்தக நாள்! ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!

3.30 மணி நிலவரம்

2014 ஆம் ஆண்டின் கடைசி வர்த்தகம் நாளான இன்று இந்தியச் சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 95.88 புள்ளிகள் அதிகரித்து 27499.42 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 34.45 புள்ளிகள் அதிகரித்து 8282.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின.

10 கிராம் தங்கத்தின் விலை 163 ருபாய் குறைந்து 26,886 ரூபாய்க்கு வர்த்த்கமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ரூபாய் 28 குறைந்து 3,395 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 63.20 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக சந்தையில் ஐரோப்பியச் சந்தைகள் ஏறத்தில் வர்த்தகமாகத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சந்தைகள் தேக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் ஸ்ட்ரைட் டைம்ஸ், மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் வளர்ச்சி சதவிகிதம் 0.38 ஆக இருக்கிறது. 

மும்பை பங்குச் சந்தையில் 2,992 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,667 பங்குகள் ஏற்றத்திலும், 1,199 பங்குகள் இறக்கத்திலும், 126 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 36 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள் :
பிஹெச்இஎல் 2.67%
கெர்யின் இந்தியா 2.38%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2.00%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 1.76%
என்.டி.பி.சி 1.44%

இறக்கப் பங்குகள் :
எம் அண்ட் எம் -1.85%
பஜாஜ் ஆட்டோ -0.92%
டெக் மஹிந்திரா -0.69%
மாருதி சுசுகி -0.52%
ஹெச்.டி.எஃப்.சி பேங்க் -0.51%

 1.30 மணி நிலவரம்:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 37.72 புள்ளிகள் அதிகரித்து 27444.26 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16.55 புள்ளிகள் அதிகரித்து 8264.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 121 ருபாய் குறைந்து 26,928 ரூபாய்க்கு வர்த்த்கமாகிறது. கச்சா எண்ணெயின் விலை ரூபாய் 12 குறைந்து 3,411 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 63.19 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் இறக்கத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. நம் இந்திய பங்குச் சந்தையின் ஏற்ற சதவிகிதம் 0.19 சதவிகிதமாக இருக்கிறது.

இந்திய பங்குச் சந்தைகளில் மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மிட் கேப், ஸ்மால் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையில் 2,276 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,361 பங்குகள் ஏற்றத்திலும், 801 பங்குகள் இறக்கத்திலும், 114 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 36 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
பிஹெச்இஎல்                            2.61%
கெர்யின் இந்தியா                     2.32%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்        1.94%
இண்டஸ்இண்ட் பேங்க்            1.75%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்        1.61%

இறக்கப் பங்குகள் :
எம் அண்ட் எம்                             -1.97%
பிபிசிஎல்                                        -0.72%
டெக் மஹிந்திரா                           -0.64%
ஹெச்சிஎல் டெக்                          -0.60%
மாருதி சுசுகி                                  -0.53%

 
 
 9.30 மணி நிலவரம்!
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி 13 புள்ளிகள் அதிகரித்து 27417 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 6 புள்ளிகள் அதிகரித்து 8255 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
 
தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 289 ரூபாய் அதிகரித்து 27,049 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு  9 ரூபாய் அதிகரித்து 3,423 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.32 ரூபாயாக உள்ளது.
 
ஐஎம்எஃப் தகவல்கள் 2015ம் ஆண்டுக்கான கணிப்பை வெளியிடும் என்பதால் டாலர்-ரூபாய் மதிப்பில் இன்று மாற்றம் உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் 334 பங்குகள் விலை அதிகரித்தும், 197 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹின்டால்கோ 1.54
இந்தஸ்இந்த் பேங்க் 1.25
கிராசிம் 0.96
டாடா பவர் 0.92
டாடா ஸ்டீல் 0.90
 
விலை குறைந்த பங்குகள்:
 
எம்&எம் -1.47
பஜாஜ் ஆட்டோ -1.36
ஹச்சிஎல் டெக் -0.91
மாருதி சுசுகி -0.75
பிஹச்இஎல் -0.58

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ