Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபிலேஷன் டீஃபிலேஷன் கொஞ்சம் கன்ஃபியூஷன்ஸ்

 இன்ஃபிலேஷன் டீஃபிலேஷன் கொஞ்சம் கன்ஃபியூஷன்ஸ்

 
இருக்கு ஆனா இல்லை குறையுது ஆனா குறையல ஆமாங்க, கிட்டத்தட்ட 2014ம் வருஷம் முழுசாவேஇன்ஃபிலேஷன் அதாவது பணவீக்கத்தைப் பத்தி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செஞ்சுதுங்க. மாதம் ஒருமுறை அரசுத் துறை வெளியிடுற புள்ளிவிவரம், பணவீக்கம் தொடர்ந்து குறைஞ்சிக்கிட்டு வருதுன்னு சொன்னாலும், புள்ளிவிவரத்தை கருத்துல வெச்சி வட்டி விகிதத்தை மாத்தி அமைக்க வேண்டிய ரிசர்வ் வங்கி இன்னமும் மூணாவது மனுஷன் மாதிரி பிரச்சனையை ஒதுங்கி நின்னே பாத்துக்கிட்டிருக்குஸ இன்னொரு பக்கம் தொழில்துறைங்க வட்டியைக் குறைக்கனும்னு கூக்குரல் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. 
 
அதெல்லாம் போகட்டும் உண்மையிலேயே, புள்ளிவிவரப்படி பணவீக்கம் குறைஞ்சுதான் இருக்கா? அப்படின்னா, சராசரி மனுஷன் உபயோகப்படுத்துற பொருட்களின் விலை குறைஞ்கிருக்கனுமே? உதாரணத்திற்கு, 2013ல் நுகர்வோர் பணவீக்கம் முதல் 10 மாதத்தில் சராசரியாக 10.9% ஆக இருந்ததுங்க. இதுவே, 2014ல் 6.6% ஆக குறைஞ்சிடுச்சிங்க. அப்படீன்னா, நுகர்வோர் பயன்படுத்துற பொருட்களோட விலை சுமார் 4.5% குறைஞ்சிருக்கனும். ஆனா குறைஞ்சிருக்கா?
 
இதுக்கெல்லாம், பொருளாதாரம் தெரிஞ்சிருக்கனும்னு அவசியமே இல்லீங்கஸ மளிகை சாமானிலிருந்து (அரிசி உட்பட), மருந்து செலவிலிருந்து, குழந்தைங்க ஸ்கூல் ஃபீஸ் வரைக்கும் எதுவுமே 4.5% குறையலைங்க. உண்மையிலேயே நுகர்வோர் பொருட்களோட விலை கூடிக்கிட்டுத்தான் போகுது. இன்னும் சொல்லப்போனால் ஒரு புள்ளி விவரப்படி மருந்து செலவுகள் வருஷத்துக்கு 15% சராசரியா ஏறிக்கிட்டுப் போகுதாம். பள்ளிக் கல்லு}ரிக் கட்டணம் பற்றிக் கேட்கவே வேண்டாம். அப்படீன்னா, நுகர்வோர் பொருட்கள் தயாரித்து விற்கிறவங்க என்ன சளைச்சவங்களா? நாங்களும் ஏத்துவோம்லஸ அப்படீன்னு அவங்களும் விலையை ஏத்தி விட்டுடறhங்க.
 
ஆனா, இதுல ஒரு முக்கிய அம்சம் என்னன்னா, பணவீக்கம் குறைஞ்சிடுச்சுன்னு அரசு புள்ளிவிவரம் சொல்லுது. ஆனா, மக்களால உணர முடியலை. இதுவே, போன வருஷம் முழுக்க பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை ஏத்திச்சு. ஆனா, அப்போ நம்மால விலைவாசி உயர்வை உணர முடிஞ்சதோட வட்டி விகித உயர்வுங்குற கூடுதல் சுமையையும் சுமக்க வேண்டியதாயிடுச்சு.
 
சரிப்பாஸ இப்போ என்ன? பணவீக்கம் தான் குறைஞ்சிடுச்சுன்னு சொல்லி ரிசர்வ் வங்கி வட்டியை குறைச்சா பொதுமக்களுக்கு நல்லதுதானே? நிச்சயமாஸ ஆனா, வட்டி குறைப்பு மக்களோட ஒரு சுமையைத்தானே குறைக்குது. இன்னொரு உதாரணம் சொல்றேன். நம்ம நாட்டுல 2009 ஜூன்ல னுநகடயவiடிn (அதாவது பணவாட்டம் - எப்படி பணவீக்கம் பணத்தோட மதிப்பை குறைக்குதோ, அதே மாதிரி பணவாட்டம் பணத்தோட மதிப்பை கூட்டும்னு அர்த்தம்) -1.6% இருந்ததுங்க. ரிசர்வ் வங்கியும் வட்டி 

விகிதத்தை குறைச்சு பணப் புழக்கத்தை அதிகப்படத்தினாங்க. ஆனா, அப்பவும்; நம்மளால பணவாட்டத்தை முழுசா உணர முடியலைங்க. நுகர்வோர் பொருட்களின் விலை அதிகமாத்தான் இருந்தது. எந்தப் பள்ளிக் கல்லு}ரியும் கட்டணத்தைக் குறைக்கலைங்க.
 
விலைவாசி குறையறதுக்கு முன்னாடியே விலைவாசி குறைஞ்சிடுச்சிங்குற அறிவிப்பு வந்திடுதுங்க. பணவீக்கம் குறைஞ்சு, பெட்ரோல் டீசல் விலை குறைஞ்சு, காய்கறி விலை குறைஞ்சு சராசரி மனுஷன சேர்றதுக்குள்ள பணவீக்கம் அதிகமாயிடுச்சுன்னு வட்டி விகிதத்தை ஏத்திடுறாங்க.
 
இதுலேந்து ஒன்னுமட்டும் புரியுதுங்கஸ இவங்க பணவீக்கத்துக்கு கணக்குல எடுத்துக்குற பொருட்கள் பெரும்பாலும் சராசரி மனுஷன் பயன்படுத்துற , செலவு செய்யற விஷயத்துல வரலைங்கஸ இதுல வேடிக்கை என்னன்னா? பணவீக்கம் 8% இருந்தா, உங்க ஓய்வு காலத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்னு பெரிய கணக்கெல்லாம் போட்டு காட்டுற பைனான்சியல் பிளானர்கள் ஒரு பக்கம், பணவீக்கம்தான் குறைஞ்சிடுச்சே வட்டியைக் குறைங்கன்னு சொல்லுற தொழில்துறை ஒருபக்கம், குறைக்கலாமான்னு யோசனைப் பன்னுற வல்லுநர்கள் ஒரு பக்கம்னு எல்லோரும் துரிதமாத்தான் செயல்படுறhங்க.
 
ஆனா, உண்மையில சராசரி மனிஷனுக்கு என்னைக்கு அவன் பயன்படுத்துற பொருட்கள் உண்மையாவே விலை குறையுதோ அன்னிக்குதாங்க உண்மையாவே பணவீக்கம் குறைஞ்சதை பொதுமக்களும் உணர முடியும். அந்த சமயத்துல வட்டி குறைப்பு நடந்தா, “கண்ணா, இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு” கேட்ட மாதிரி இருக்கும். ஆனா, இங்க லட்டு வருதுன்னு அறிவிப்பு வந்திடும். அது சராசரி மனுஷன போய் சேரும்போது வெறும் ஒரு பூந்தியாதாங்க இருக்குது. பொதுமக்களைப் பொறுத்தவரை வட்டிக் குறைப்பும், வட்டி உயர்வும் மாறி வரும் சடங்கு மாதிரிதாங்க. வட்டி விகித பயனும், பணவீக்கம் குறைவும் ஒருசேர வரும்போது தான் உண்மையான பலன் எல்லாருக்கும் கிடைக்கும். இல்லைன்னா, இன்ஃபிலேஷன், டீஃபிலேஷன் இதெல்லாம் ஒரு கன்ஃபியூஷனாதாங்க இருக்கும்.  
 
-மாதவன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP