Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2015 புத்தாண்டில் எடுக்க வேண்டிய நிதித் தீர்மானங்கள்:

புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டின் முதல்நாளிலும் நாம் அந்த ஆண்டில் பின்பற்ற வேண்டிய ‘புதிய’ தீர்மானங்களைப் பட்டியலிடுகிறோம். ஆனால், பெரும்பாலானவற்றை முதல் சில வாரங்களுக்குப் பிறகு தொடர்வதில்லை. இந்த வருடம் அவ்வாறு இல்லாமல் இந்த ஆண்டு மட்டுமல்ல, நம் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பயன் அளிக்கக்கூடிய சில மிகவும் எளிய, நாம் செய்யத் தவறவிட்ட சில நிதி சார்ந்த தீர்மானங்களைப் பார்ப்போம். 

1. நான் வாரம் குறைந்தது 2 மணி நேரம், நிதித் திட்டங்கள் சார்ந்த என் அறிவை விரிவுப்படுத்த, அது தொடர்பான புத்தகங்கள், ஆன்லைன் ஆகியவற்றில் செலவிடுவேன். (நம் வளமை, நம்முடைய முதலீடுகளில் அமைவதில்லை. முதலீடு சார்ந்த அறிவினால் மட்டுமே - ராபர்ட் கியோசகி)

2. என்னுடைய வங்கிக் கணக்கு, பாலிசிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்ற முதலீடுகள், டீமேட் கணக்கு ஆகியவற்றில் நாமினேஷன் செய்வேன். பழைய நாமினேஷன்களையும் தற்போது குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப மறு ஆய்வு செய்வேன். 

3. நான் முதலீடுகள், பாலிசி, டீமேட் ஸ்டேட்மென்ட் முதலியவற்றை ஒழுங்கானமுறையில் ஃபைல் செய்து வைப்பேன். இது தேவையான விவரங்களை எளிதில் அறிய உதவும். 

4. நான் என் குடும்பத்தில் என்னைத் தவிர, என் மனைவி (அ) தாய் ஆகியோரிடம் முதலீடுகள், பாலிசிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன (பீரோவில் எங்கு, வங்கி லாக்கர்) என்பதைத் தெரிவிப்பேன்.

5. முதலீடுகள், பாலிசிகள் முதலியவற்றுக்கு எந்த ஏஜென்ட் அல்லது முகவரை அணுக வேண்டும் என்று இன்வெஸ்ட்மென்ட் ஃபைலில் முதலில் முகவர் பெயர், போன், இ-மெயில் முகவரியை எழுதிவைப்பேன். 

6. ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் போதுமான அளவு உள்ளதாக என்று மறு ஆய்வு செய்து, தேவையெனில் டேர்ம் ப்ளான் அல்லது ஹெல்த் ப்ளானை உடனடியாக எடுப்பேன். 

7. என் கிரெடிட் கார்டை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்துவேன். பேலன்ஸ் ரோலோவர் செய்யாமல், மாதாமாதம் முழுத் தொகையையும் அடைத்துவிடுவேன். 

8. என் தற்போதைய முதலீடுகள் சரியானவைதானா, செயல்பாடு சரியாக உள்ளதா? மாற்றம் தேவையா என்று ரிவியூ செய்வேன். 

9. இம்பல்சிவ் பர்ச்சேஸ் தவிர்த்து தேவையானவற்றை மட்டுமே வாங்குவேன். அநாவசிய செலவுகளைக் குறைத்து மாத சேமிப்பை அதிகப்படுத்துவேன். 

10. மாதம் ஒருமுறை முதலீடுகளில் சேமிப்புகள், செலவுகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக சரியான நடவடிக்கை எடுப்பேன். 

 

ஆர்.ராதா கிருஷ்ணன், நிதி ஆலோசகர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close