Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திட்ட குழு பெயர் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு:

மத்தியில் பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், திட்ட குழுவையும் மாற்றி அமைக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
 
சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டதால் திட்ட குழுவை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று மோடி கூறியிருந்தார்.
 
திட்ட குழுவை எந்தெந்த வகைகளில் மாற்றி அமைக்கலாம் என்று கடந்த சில நாட்களாக  மத்திய அரசு அதிகாரிகளும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஆய்வு செய்து வந்தனர். முதல்கட்டமாக திட்ட குழுவின் பெயரை எப்படி மாற்றலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
 
பல்வேறு பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு ‘‘நீதி அயோக்" என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. இந்த புதிய பெயரை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் குடியரசு தின உரையில் அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
 
எனவே புதிய கொள்கை குழுவுக்கு ஏற்ப 1950 ஆம்  ஆண்டின் சட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் திட்ட குழு முழு அளவில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
 
இந்த மறுசீரமைப்பின் போது, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ