Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மானியம் அல்லாத சமையல் எரிவாயு விலை 43.50 ரூபாய் குறைப்பு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு 43.50 ரூபாய் குறைந்துள்ளது. 
 
14.2 கிலோ அளவுள்ள மானியம் அல்லாத ச்சில்லிண்டர் தற்போது டெல்லியில் 752 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை 708.50 ரூபாயாக குறைந்துள்ளது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்தன.
 
இது கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஐந்தாவது நேரடி விலை குறைப்பாகும். இந்த சிலிண்டர்கள் ஒரு வாடிக்கையாளர் தனது வருடாந்திர அளவான 12 சிலிண்டர்களை தாண்டிய பிறகு கணக்கிடப்படும் சிலிண்டர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
 
மானியம் பெற்ற சிலிண்டரின் விலை டெல்லியில் 417 ரூபாயாக உள்ளது.மானியம் பெற்ற சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
 
கச்சா எண்ணெயின் உற்பத்தியை ஓபிஇசி நாடுகள் குறைக்காததால் அதன் விலை ஒரு பேரல் 57 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இது கடந்த 2009ம் ஆண்டிலிருந்து மிக குறைந்த விலையாக பதிவாகியுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ