Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிகர நேரடி வரி வசூல் ரூ.3.29 லட்சம் கோடி

ஏப்ரல்-நவம்பர் மாத காலத்தில், மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் ரூ.3.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை விட 5.67% அதிகமாகும். இதே காலத்தில், மொத்த நேரடி வரி வசூல் ரூ.6.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 


நேரடி வரி வசூலில் நிறுவன வரி, தனிநபர் வருமானவரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும்.
 
மறைமுக வரி போல் மற்றவர்கள் தலையில் சுமத்த முடியாது. மத்திய அரசு நடப்பு 2014-15-ஆம் நிதி ஆண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் வாயிலாக ரூ.13.60 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
இதில், நேரடி வரிகள் ரூ.7.36 லட்சம் கோடியும், மறைமுக வரிகள் ரூ.6.24 லட்சம் கோடியும் அடங்கும். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் நேரடி வரி வசூல் வளர்ச்சி விகிதம் 16 சதவிதமாகவும், மறைமுக வரி வசூல் வளர்ச்சி 20 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ