Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை மீதான உற்பத்தி வரி ரூ.2 உயர்வு!

பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி விலையை லிட்டருக்கு 2 ரூபாயை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஆனால் உற்பத்தி வரி உயர்வால் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, பேரலுக்கு 55 டாலராக குறைந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, குறிப்பாக 15,000 கி.மீ. அளவுக்கு சாலைகளை அமைக்க தேவைப்படும் நிதியை திரட்ட, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில், லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் ரூ.6,000 கோடி பொருளாதார வளர்ச்சிப் பணிகளுக்கும், சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்" என்று கூறப்பட்டு உள்ளது.

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா 1.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதையடுத்து, டிசம்பர் 2 ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2.25 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இந்த வரி உயர்வால் கிடைக்கும் ரூ.17,000 கோடி, நடப்பு நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று பெட்ரோலியத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ